Udupi Woman Assaulted (Photo Credit: @HateDetectors X)

மார்ச் 21, உடுப்பி (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம், மல்பேபோர்ட் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி பாய். இவர் மீன் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மார்ச் 18 அன்று, லட்சுமி பாய் விற்பனை செய்ய வைத்திருந்த மீனை, பெண் ஒருவர் திருடி சென்றதாக கூறப்படுகிறது. அவரை தனது ஆதரவாளர்களான சுந்தர், சில்பா உட்பட 3 பேருடன் பிடித்த பெண்மணி, மரத்தில் கட்டிவைத்து தாக்குதல் நடத்தினார். இந்த விஷயம் குறித்த வீடியோ வெளியாகி, மிகப்பெரிய அளவில் வைரலாகியது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்மணி தலித் என்பதால், அவர் சார்ந்த சமுதாய அமைப்புகள் கண்டன குரல் எழுப்பின. பெண் தாக்கப்பட்ட வீடியோ காவல்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. Trending Video: ஈவுஇரக்கமற்ற மனிதா? தெருநாயை சங்கிலியில் கட்டி சாலையில் இழுத்து வந்த நபர்; வார்த்தையால் வெளுத்து வாங்கிய பெண்.!

ஏஎஸ்பி எச்சரிக்கை:

இதனையடுத்து, பெண்மணி தாக்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மால்பே காவல்துறையினர், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட லட்சுமி பாய், சுந்தர், சில்பா, உள்ளூரைச் சேர்ந்த நபர்கள் என 4 பேரை கைது செய்தனர். இந்த விஷயம் குறித்து விளக்கம் அளித்த கூடுதல் காவல் ஆணையர் கே. ஆரன், "மேற்கூறிய விசயம் தொடர்பாக தகவல் கிடைத்ததும், உடனடியாக தகுந்த பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. சாதிய மோதல்கள், அதுகுறித்த சர்ச்சை செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

பெண்ணை 3 பேர் தாக்கும் காட்சிகளும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி தெரிவிக்கும் காணொளியும்: