ஏப்ரல் 25, பாலக்கோடு (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்கோடு (Palacode Husband Suicide) மாவட்டம், வடசேரிகோணம் பகுதியில் வசித்து வருபவர் பிரிஜித் (வயது 34). இவரின் மனைவி சின்னசேனா (வயது 30). தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், தம்பதிகளுக்கு தற்போது 3 வயதுடைய மகன் இருக்கிறார். கூலித்தொழிலாளியான பிரிஜித், மதுபானம் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளார். இதனால் அவ்வப்போது மதுபோதையில் வீட்டிற்கு வருவது வழக்கம். இது காலப்போக்கில் தம்பதியிடையே குடும்பத்தகராறை உருவாக்கி இருக்கிறது. இந்நிலையில், நேற்று பிரிஜித் வழக்கம்போல மதுபானம் அருந்திவிட்டு, நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வந்துள்ளார். Kallakurichi Shocker: குட்டையில் நீச்சல் பயிற்சி: அக்கா, தம்பி நீரில் மூழ்கி பரிதாப பலி.! 

பளார் விட்டதில் அடுத்தடுத்து நடந்த சோகம்: இதனால் கணவரை இடைமறித்த மனைவி, எதற்காக தாமதமாக வீட்டிற்கு வந்தீர்கள்? என கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் ஆவேசமடைந்த பிரிஜித், தனது மனைவி சின்னசேனாவை கன்னத்தில் அறைந்துள்ளார். கணவரிடம் பளார் வாங்கிய மனைவி மயங்கி சரிந்துள்ளார். இது போதையில் இருந்த பிரித்துக்கு கொலை போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மயக்கத்தில் இருந்த சின்னசேனா எழும்பாத காரணத்தால் பதறிப்போன பிரிஜித், மனைவி இறந்துவிட்டதாக எண்ணி வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மயக்கத்தில் இருந்து எழுந்த மனைவி, தூக்கில் கணவர் சடலமாக கிடப்பதை கண்டு பதறியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய சோதனையில் பிரிஜித் மரணம் உறுதி செய்யப்பட, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழுக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் மேற்கூறிய தகவல் வெளியாகியுள்ளது.