![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/11/Sexual-Harassment-Court-Judgement-File-Pic-Photo-Credit-Pixabay-380x214.jpg)
நவம்பர் 28, திருவனந்தபுரம் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தை (Thiruvananathapuram) சேர்ந்த 40 வயது பெண்மணி, கடந்த 2018ம் ஆண்டு தனது கணவரை பிரிந்து, 11 வயது குழந்தையுடன் தனியே வசித்து வந்தார். பெண்மணியின் கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவரும் நிலையில், இதனால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பெண்மணி கணவரை பிரிந்திருக்கிறார்.
தனியே வாழ்ந்துவந்த பெண்ணுக்கு சிசுபாலன் என்பவருடன் பழக்கம் ஏற்படவே, அவருடன் வீடெடுத்து தனியே தங்கியிருந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மொத்தமாக 2 கள்ளகாதலர்களுடன் பெண்மணி குடித்தனம் நடத்தி வந்துள்ளார். அவர்கள் தரும் பணத்தை வைத்து வீட்டுச்செலவுகளை கவனித்து இருக்கிறார்.
இதனிடையே, கடந்த 2018ம் ஆண்டு சிசுபாலனுக்கு தனது கள்ளகாதலியின் மகள் மீது பார்வை திரும்பியுள்ளது. கள்ளக்காதலியின் அனுமதியுடன் கயவன் சிறுமியை சீரழித்து இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் தெரிவித்தபோது, அவர் இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என மகளை கண்டித்து இருக்கிறார். Thailand Wedding Horror: குடிபோதையில் மணமகள் உட்பட 4 பேரை சுட்டுக்கொன்ற மணமகன்: இறுதியில் தற்கொலை.. உறவினர்களை பதறவைத்த சம்பவம்.!
இவ்வாறாக ஒரு ஆண்டு முழுவதும் சிறுமியை சிசுபாலன் பலமுறை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். பலாத்காரத்தின் போது கயவன் அவ்வப்போது நிகழ்த்திய கொடுமை, சிறுமியின் பிறப்புறுப்பு மற்றும் அந்தரங்க உறுப்புகளில் காயங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
கடந்த 2019ம் ஆண்டு சிறுமி தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றபோது, இதுகுறித்து பாட்டியிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். உடனடியாக பாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது.
இதனையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசுபாலன் மற்றும் சிறுமியின் தாயை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணியின்போதே சிசுபாலன் தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் சிறுமியின் தாய் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு, இதுதொடர்பான விசாரணை திருவனந்தபுரம் (Thiruvananthapuram Special Pocso Court) போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையில் 22 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டன. இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நீதிபதி ஆர்.ரேகா தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில், குற்றவாளியான சிறுமியின் தாயாருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம், 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.