
ஜூன் 04, மத்திய பிரதேசம் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜாபுவா மாவட்டத்தில் சிமெண்ட் லாரி மீது வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். மேக்நகர் பகுதியில் இன்று அதிகாலை 2:30 மணி அளவில் இந்த சோகம் நடந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. காதலியுடன் வீட்டைவிட்டு வெளியேறிய வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.. நடந்தது என்ன..?
திருமண விழாவுக்கு சென்று திரும்பும்போது சோகம் :
இவர்கள் திருமண விழாவிற்கு சென்று திரும்பி கொண்டு இருந்தபோது விபத்து நடந்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் பலியான 9 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.