MP Pregnat Woman Pushcart Case (Photo Credit: @zoo_bear X)

மார்ச் 30, சைலான (Madhya Pradesh News): மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரத்லம் மாவட்டம், சைலநா நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணா கௌலா. இவரின் மனைவி நீது. தம்பதிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது இருவரின் அன்புக்கு அடையாளமாக நீது கர்ப்பமாக இருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியான நீது, கடந்த மார்ச் 23 அன்று, காலை 9 மணியளவில் பிரசவ வலியை எதிர்கொண்டுள்ளார். இதனால் அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படவில்லை, குழந்தை பிறக்க 3 நாட்கள் ஆகும் என கூறி அனுப்பி வைத்துள்ளனர். 3-Year-Old Baby Killed: 3 வயது மகளை கழுத்து நெரித்துக்கொன்ற தந்தை; குழந்தையின் நிறம் சந்தேகத்தில் விபரீதம்.! 

மருத்துவமனைக்கு சென்றும் பலனில்லாத சோகம்:

பின் மீண்டும் மதிய வேளையில் நீதுவுக்கு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோதிலும், அதேபோல கூறி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இறுதியாக நள்ளிரவு 1 மணியளவில் பெண்மணி பிரசவ வலி பொறுக்க இயலாமல் அலறியுள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால், காத்திருக்க வேண்டாம் என நினைத்த கணவர், தள்ளுவண்டியில் மனைவியை ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். ஆனால், மருத்துவமனை செல்வதற்குள் நீதுவுக்கு குழந்தை பிறந்து, சில நிமிடங்களில் உயிரிழந்தது. பின் நீது மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த பதறவைக்கும் சம்பவம் தொடர்பான உண்மை, நேற்று சிசிடிவி காட்சியுடன் வெளியாகி, கடுமையான கண்டனத்தை குவித்து வருகிறது. தற்போது இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியை தள்ளுவண்டியில் ஏற்றி கணவர் அழைத்துச்செல்லும் காட்சி:

மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்ட காட்சி: