Nail Disorders: வழுக்கைத் தலையைத்தொடர்ந்து நகத்தில் பிரச்சனை.. மர்ம பூதம் கதையாக தொடரும் சோகம்.!

சமீபத்தில் முடி உதிர்தல் தொடர்பான பிரச்சனையை எதிர்கொண்ட புல்தானா மக்கள் தற்போது அடுத்த நோயை எதிர்கொண்டு வருகின்றனர்.

Nail Disorders: வழுக்கைத் தலையைத்தொடர்ந்து நகத்தில் பிரச்சனை.. மர்ம பூதம் கதையாக தொடரும் சோகம்.!
Nail Disorders (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 17, புல்தானா (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சமீபத்தில் முடி உதிர்வு தொடர்பான பிரச்சனையை எதிர்கொண்டு இருந்தனர். இதனிடையே, தற்போது புல்தானா மாவட்டத்தின் ஷேகான் தாலுகாவில் வசித்து வரும் மக்கள் நகம் தொடர்பான பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். முடி உதிர்வது தொடர்பான பிரச்சனைக்கே தற்போது வரை காரணம் அல்லது தீர்வுகள் என்பது கண்டறியப்படவில்லை. நல்லா இழுடா குழந்தை.. டாக்டர் செய்யிற காரியமா இது? பகீர் காட்சிகள் வைரல்.! 

நகம் உடைந்து விழும் பிரச்சனை:

இந்நிலையில், அங்குள்ள மக்கள் நகம் தானாக உடைந்து விழுவது தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கின்றனர். ஷேகான் தாலுகாவில் இருக்கும் 15 கிராம மக்களும் முடி உதிர்வு தொடர்பான பிரச்சனைக்கு பின்னர் நகம் உடைவது தொடர்பான விஷயத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஆய்வு நடத்தப்படும் முடிவுகள் வரவில்லை. முடி உதிர்வு பிரச்சனை காரணமாக ஏற்கனவே அங்குள்ள பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 70% மக்கள் வழுக்கை பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர்.

.

நடுராத்திரியில் பூதம் வழிமறிக்கும் என்ற கதையாக இன்று வரை புல்தானாவின் நோய்களுக்கான மர்மம் தொடருகிறது.

(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 08:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).