Mumbai Family Dispute Murder Case (Photo Credit : @ians_india X)

மே 19, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தகிசர் மேற்கு கணபதி பாட்டில் நகரில் வசித்து வருபவர் ஷேக். இதே பகுதியில் வசித்து வருபவர் குப்தா. இரண்டு குடும்பங்களுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாகவே வாக்குவாதம் மற்றும் மோதல் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு குடும்பத்துக்கும் இடையே நடந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஹமித் ஷேக், ராம் குப்தா மற்றும் அரவிந்த் குப்தா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பயங்கர ஆயுதங்களால் சண்டையிட்ட குடும்பங்கள் :

இருதரப்பினரும் சண்டையிட்ட நிலையில் படுகாயமடைந்து பரிதாபமாக தங்களது உயிரை விட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில், மாலை 5 மணியளவில் மீண்டும் இரண்டு குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பயங்கர ஆயுதங்களால் சண்டையிட்டு கொண்டதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். Trending Video: கேட்டதை விட அதிகம் வாரி வழங்கிய ஏடிஎம்.. குவிந்த மக்கள் கூட்டத்தால் பரபரப்பு.!

போலீசார் விசாரணை :

இதனை தொடர்ந்து படுகாயமடைந்த மூவரையும் மீட்ட அதிகாரிகள் சதாப்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுவது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இறந்தவர்களின் உடலைக்கண்டு கதறியழும் உறவினர்கள் :