Bandra Stampede (Photo Credit: @ANI X)

அக்டோபர் 27, பாந்த்ரா இரயில் நிலையம் (Maharashtra News): வடமாநிலங்களில் சாத் & தீபாவளி திருவிழா கொண்டாட்டங்கள், தென்மாநிலங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இதனால் இரயில், கார், பேருந்து, விமானம் என பல வழிகளில் மக்கள் தங்களின் சொந்த ஊர் நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெருநகங்களின் பேருந்து நிலையங்கள், முக்கிய இரயில் முனையங்களில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. Breaking: கை-கால்களை உடைத்து 13 வயது சிறுமி பலாத்காரம் & கொலை; சிவகங்கையில் பேரதிர்ச்சி..! 

அளவுக்கு அதிகமாக குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்:

இந்நிலையில், மும்பையில் உள்ள பாந்த்ரா இரயில் நிலையத்தில், இன்று காலை வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் தங்களின் வீட்டிற்கு செல்ல வந்திருந்தனர். உத்திரபிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பலரும் ஏற முற்பட்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

உ.பி இரயிலை பிடிக்க முயன்று சோகம்:

கூட்ட நெரிசலைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். காலை 6 மணியளவில் அளவுக்கு அதிகமான வடமாநில தொழிலாளர்கள் திடீரென இரயிலில் பயணம் செய்ய ஒட்டுமொத்தமாக கூட்டமாக வந்ததால் இந்த துயரம் நடந்துள்ளது. இவர்கள் அனைவரும் பாந்த்ராவில் இருந்து கோரக்பூர் (உத்திரப்பிரதேசம் மாநிலம்) செல்லும் இரயிலை பிடிக்க முயற்சித்தது கூட்ட நெரிசலுக்கு வழிவகை செய்துள்ளது.

கூட்ட நெரிசலால் பாதணிகளை விட்டு பயணித்த பயணிகள்: