Borigumma Accident (Photo Credit: @PTI X)

ஜனவரி 27, போரிகும்மா (Odisha News): ஒடிசா மாநிலத்தில் உள்ள கோரபுட் (Koraput Accident) மாவட்டம், போரிகும்மா பகுதியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். சாலையில் ஆட்டோ வந்துகொண்டு இருந்த நிலையில், ஆட்டோவுக்கு பின்னால் அதிவேகத்தில் எஸ்யுவி கார் ஒன்று வந்தது. அப்போது எதிர்திசையில் டிராக்டர் ஒன்றும் வந்தது. அதிவேகத்தில் வந்த கார் ஓட்டுநர், ஆட்டோவை முந்திச்செல்ல முயன்றார்.

அலட்சியத்தால் நடந்த பயங்கரம்: ஆனால், அவரின் கணிப்புகள் அனைத்தும் தவறியதால், நொடியில் ஆட்டோ மீது மோதிய கார், டிராக்டரின் வலப்பக்க டயரில் இடித்து விபத்திற்குள்ளானது. ஆட்டோ மீது கார் மோதிய வேகத்தில், ஆட்டோ அங்கிருந்த பள்ளத்தில் தறிகெட்டு சென்று கவிழ்ந்தது. கார் ஓட்டுனரின் அலட்சியம், அதிவேகத்தில் நொடியில் நடந்த இவ்விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயத்துடன் உயிருக்கு அலறித்துடித்தனர். விபத்தைக்கண்டு அதிர்ந்துபோன உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. Arya - Santhanam Combo: இது செம்ம காம்போ.. நண்பனுக்கு கரம் கொடுக்கும் ஆர்யா: சந்தானம் கூட்டணியில் உருவாகும் படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! 

2 பெண்கள் உட்பட 3 பேர் பலி: நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் 2 பெண்கள் உட்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது. ஆட்டோவில் பயணம் செய்த 2 பெண்களும், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரும் என 3 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.

முதல்வரின் இரங்கல் & நிதிஉதவி அறிவிப்பு: இவர்கள் அனைவரும் கோராபுட்டில் உள்ள சஹீத் லக்ஷ்மன் நாயக் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, தலா ரூ.3 இலட்சம் நிதிஉதவி வழங்குவதாவும் அறிவித்துள்ளார். காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பதறவைக்கும் காட்சிகள்: