Liquor (Photo Credit : Pixabay)

மே 28, புதுச்சேரி (Pondicherry News): சுற்றுலாவுக்கு பிரபலமான புதுச்சேரியில், வெளிநாட்டு மதுவகைகள் விற்பனையும் எப்போதும் களைகட்டும். இதனால் மதுபிரியர்கள் விடுமுறை நாட்களில் புதுச்சேரிக்கு சென்று மதுபானம் வாங்கி அருந்தி வருவது தொடருகிறது. புதுச்சேரியில் அதிகம் விற்பனை செய்யப்படும் மதுபானத்தின் விலையை, அவ்வப்போது அம்மாநில கலால்துறை உயர்த்தியும் உத்தரவிட்டு வருகிறது. லிஃப்ட் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம்.. சிறுமியை சீரழித்த கோவில் பூசாரி கைது..!

மதுபான விலையை உயர்த்தியது கலால்துறை:

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்களின் விலையை கலால் துறை உயர்த்தியுள்ளது. மதுபானங்களின் விலை உயர்வை உடனடியாக அமல்படுத்தப்படுவதாக புதுச்சேரி கலால் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிராந்தி, ஒயின், விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் ஒரு லிட்டருக்கு குறைந்தது ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல பீர் வகைகள் ரூ. 30 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.