ஜூலை 11, லூதியானா (Punjab News): பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பெரோஸ்பூர் சாலையில் இரண்டு இளைஞர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் சாலையோரம் மூட்டைகளை வீசி சென்றதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மூட்டையை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது இளம்பெண்ணின் அழுகிய சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெண்ணின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். Pune: லாட்ஜில் 28 வயது டாக்டரை சீரழித்த இளைஞர்.. போதை மருந்து கொடுத்து பயங்கரம்.!
சடலத்தை மூட்டையில் கட்டி வீசிய இளைஞர்கள் :
மேலும் உயிரிழந்த பெண் யார்?, அவர் கொலை செய்யப்பட்டாரா?, அவரை கொலை செய்து வீசி சென்ற இளைஞர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரண்டு இளைஞர்களுக்கும் காவல்துறையினர் சார்பில் வலை வீசப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், இளைஞர்கள் மூட்டைகளை வீசுவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். மக்கள் கேட்டபோது அழுகிய மாம்பழங்கள் இருக்கின்றன எனக் கூறியுள்ளனர். இதனால் மக்களும் கண்டுகொள்ளாத நிலையில், துர்நாற்றம் வீசியதால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சடலத்தை அழுகிய மாம்பழம் என ரோட்டில் வீசிச்சென்ற வீடியோ :
पंजाब के लुधियाना में बाइक सवार 2 युवकों ने एक युवती का शव बोरी में डालकर फिरोजपुर रोड पर डिवाइडर पर फेंक दिया।
वहां मौजूद एक रेहड़ी वाले ने युवकों से बोरी के बारे में पूछा तो उन्होंने कहा कि वे तो खराब आम फेंकने आए हैं। जब रेहड़ी वाले ने बोरी चेक की तो उसमें युवक्ति का शव था।… pic.twitter.com/Ny9IFKfGNv
— Amit Pandey (@amitpandaynews) July 9, 2025