மே 08, சவாய் மதோபூர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மாதேபூர் மாவட்டம், டெல்லி - மும்பை (Delhi Mumbai Expressway) அதிவேக தேசிய நெடுஞ்சாலையில், பனாஸ் நதிப்பாலத்திற்கு முன்பு மே மாதம் 05ம் தேதி கார் ஒன்று பயணம் செய்துகொண்டு இருந்தது. காரில் முகுந்த் நகர் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர், ரந்தம்பூர் திரிநேந்திர விநாயகர் (Sawai Madhopur Car Lorry Accident) கோவிலுக்கு சென்றுகொண்டு இருந்தனர். காரில் மனிஷ் சர்மா, அவரின் மனைவி அனிதா சர்மா, சதீஷ் சமா, பூனம், சந்தோஷ், கைலாஷ், குழந்தைகள் மனன், தீபாளி ஆகியோர் பயணம் செய்தனர். இவர்களின் வாகனம் பனாஸ் நதிப்பாலம் நோக்கி பயணம் செய்தபோது, கார் தேசிய நெடுஞ்சாலையில் யு-டர்ன் எடுத்த லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. Ronaldo Face Legal Issue Promoting Binance Crypto: கிரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்திய ரொனால்டோவுக்கு புதிய சிக்கல்; அமெரிக்க நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.! 

2 குழந்தைகள் காயத்துடன் உயிர்பிழைப்பு, குடும்பமே பலி: லாரி ஓட்டுனர் உச்சகட்ட அலட்சியத்துடன் செயல்பட்டு விபத்தும் ஏற்பட்டுவிட, அவர் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து எதிர்திசையில் தனது வாகனத்தை இயக்கி சென்றார். இந்த விபத்து சம்பவம் குறித்து காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு பிற வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு அதிகாரிகள் வருகைதந்த நிலையில், 2 குழந்தைகளான தீபாளி மற்றும் மனன் மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவாறு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். மேற்கூறிய பிற அனைவரும் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். New Thug In Town ThugLife: மங்காத்தா அஜித் போல, காரில் வந்து மாஸ் காட்டிய சிம்பு... கமல் ஹாசனின் தக் லைப் நியூ தக் இன் டவுன் வீடியோ உள்ளே.! 

தலைமறைவான லாரி ஓட்டுனருக்கு வலைவீச்சு: இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போளி காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்திய லாரியை சிலமணிநேரத்தில் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அதன் ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானதால், அதிகாரிகள் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் துயர வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. அந்த காட்சிகளின்படி, லாரி ஓட்டுனரின் அலட்சிய செயலால் குடும்பம் பலியாகி இருப்பது உறுதிபட தெரியவந்துள்ளது. சாலை விதிகளை மதித்து செல்வோரும், சிலரின் அலட்சியத்தால் உயிரிழக்கும் சோகம் தொடர்கதையாகிறது.

சாலை விதிகளை கடைபிடிப்போம்! பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வோம்!!