
மே 21, கான்பூர் (Uttarpradesh News): உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியில் வசித்து வரும் பெண்மணி மனிஷா. இவரது கணவர் சுசில். தம்பதி இருவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், ஒரு மகளும், இரண்டு மகனும் இருந்துள்ளனர். இதில் ஒரு வருடத்திற்கு முன் தம்பதியின் இரண்டு வயது மகள் மற்றும் ஒரு வயது மகன் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்காதல் பழக்கம்:
நான்கு வயதுடைய மகன் மட்டும் உயிருடன் இருந்த நிலையில், மனிஷாவுக்கு விகாஸ் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறவே தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்த மனிஷா, தனது குடும்பத்தினரின் கட்டாயத்தால் வேறு வழியின்றி மீண்டும் கணவரிடம் திரும்பியுள்ளார். நீதிபதியாக பணியாற்ற 3 ஆண்டுகள் வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம்.. உச்ச நீதிமன்றம் உத்தரவு..!
சைக்கோ தாயின் பகீர் செயல்:
இந்த நிலையில் கள்ளக்காதலனை மறக்க இயலாமல் தவித்த மனிஷா அதற்கு இடையூறாக இருக்கும் மகனை கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். தனது திட்டப்படி மகனின் முகத்தில் கொடூரமாக கடித்து வைத்து சைக்கோ போல கழுத்தை நெரித்துக் கொன்ற தாய் எதுவும் நடக்காதது போல வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவன் மகன் குறித்து கேட்கவே முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
அதிகாரிகள் அதிரடி:
இதனால் மாடியில் சென்று பார்த்தபோது மகன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவர்களின் பரிசோதனையில் மரணம் உறுதிசெய்யப்படவே, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் உண்மை அம்பலமாகவே, அதிகாரிகள் மனிஷா மற்றும் விகாசை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.