UP Woman Tortured by Husband (Photo Credit : priyarajputlive X)

மே 16, பிரெய்லி (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரெய்லி மாவட்டம், அயோன்லா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் நிதின் சிங். இவரின் மனைவி டோலி. தம்பதிகளுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்துள்ளது. கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்த இருவரில், நிதின் சிங் மற்றும் அவரின் குடும்பத்தினர் எப்போதும் டோலியிடம் பிரச்சனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். Tasmac ED Raid: டாஸ்மாக் முறைகேடு.. மேலாண் இயக்குநர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..! 

தலைகீழாக தொங்கவிட்டார்:

இதனிடையே சம்பவத்தன்று மனைவியிடம் சண்டையிட்ட நிதின் சிங், இரவு 10 மணியளவில் மனைவியை வீட்டின் முதல் மாடிக்கு இழுத்துச்சென்று கால்களில் கயிறு கட்டி தலைகீழாக தொங்க விட்டுள்ளார். இதனால் பெண் தனது உயிரை காப்பாற்றக்கூறி அலறவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பெண்ணை காப்பாற்றி இருக்கின்றனர். மேலும், இதுதொடர்பாக உள்ளூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறை விசாரணை:

தகவலை அறிந்ததும் நேரில் வந்த அதிகாரிகள், பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவர் நிதின் சிங் உட்பட அவரின் குடும்பத்தினர் 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை கொடூரமாக தாக்கி கொலை முயற்சி சம்பவம் நடந்த சூழலில், அக்கம் பக்கத்தினரின் தலையீட்டால் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

பெண் உயிருக்காக அலறிய பதறவைக்கும் காட்சிகள்: