மே 09, பரேலி (Uttar Pradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி (Bareilly Girl Pushed in Front of Running Train) மாவட்டம், பதேகன்ச் பகுதியில் வசித்து வருபவர் பரியத் ஹுசைன். இவர் அப்பகுதியில் வசித்து (Minor Girl Chops into Two Pieces) வரும் 15 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனிடையே, சிறுமி சம்பவத்தன்று கல்லூரியில் தேர்வு படிவத்தை நிரப்ப சென்றுள்ளார். அச்சமயம் சிறுமியை கண்ட இளைஞர், அவரை தன்னுடன் அழைத்து சென்றார்.
மகளின் இறப்பை அறிந்த பெற்றோர்: இதற்குப்பின் சிறுமி அங்குள்ள பெஹ்குல் ஆற்றின் பாலத்திற்கு கீழ் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் உடல் இரண்டு துண்டாக பிரிந்து தனித்தனியே கிடந்தது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறுமியின் பெற்றோருக்கும் விஷயம் தெரியவந்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் நிகழ்விடத்தில் குவிந்தனர். இதனால் பரபரப்பு சூழ்நிலையும் உண்டாகியது. Auto Driver Molests School Girl: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ ஓட்டுனரின் அதிர்ச்சி செயல்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ லீக்.!
எல்லை சண்டையில் காவல்துறை மும்மரம்: மரணம் நிகழ்ந்துள்ள இடம் பரேலி - ஷாஜஹான்பூர் மாவட்ட எல்லை என்பதால் யார் வழக்கை விசாரணை செய்வது என்ற வாதம் காவல் துறையினரிடையே எழுந்துள்ளது. இதனால் வழக்குப்பதிவு மற்றும் விசாரணை 12 மணிநேரம் தாமதமாகி இருக்கிறது. ஒருவழியாக அதிகாரிகளின் சண்டை நிறைவுபெற்றதும், பெற்றோர் புகார் அளித்த பரேலியின் ஃபதேகஞ்ச் காவல் துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர்.
இளைஞர் கைது, தொடரும் விசாரணை: முதற்கட்ட விசாரணையில் சிறுமி இறுதியாக பரியத் ஹுஸைனுடன் பயணித்தது உறுதியாகி அவர் கைது செய்யப்பட்ட நிலையில், சிறுமியை அவர் அழைத்து வைத்து ஆற்றுப்பகுதியில் இரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இரயில் முன் தள்ளிவிட்டதில் சிறுமியின் உடல் இரண்டு துண்டாகி அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இளைஞரிடம் கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.