Massage (Photo Credit Facebook)

ஜனவரி 17, சென்னை (Chennai): முகத்தை பொலிவூட்ட பல ஃபேசியல், கின்சர், பிளீச், மற்றும் பலவகையான அழகு சாதனப்பொருட்கள் உள்ளன. அதிலும் ஃபேஸ் மசாஜ் மிக முக்கியமானது. இந்த மசாஜ் செய்வதற்கு அழகு நிலையங்கள் செல்ல வேண்டும் என்றெல்லாம் கிடையாது. இதை நாம் சுயமாக வீட்டிலேயே செய்யலாம். இது இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை கொண்டுவந்து, முகத்தில் இரத்தவோட்டத்தை சீராக்கி முகத் தசைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இதனால் முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

வீட்டிலேயே இந்த மசாஜ் தொடர்ந்து செய்து வர முகம் வடிவமாகவும், விரைவில் முதிர்ச்சி அடையாமலும் இருக்கும். முகத்திலுள்ள அதிக கொழுப்புகள் விரைவில் குறையும். மசாஜ் செய்ய, அவரவர் முகத்திற்கு ஏற்ற நரிஷிங் கிரீம் அல்லது பால் , தயிர், வெண்ணைய் போன்றவற்றை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். இவைகளின் ஊட்டங்களை நம் தோல் எளிதில் உறிஞ்சிக்கொள்ளும். முகத்தில் லேசாக தட்டி தட்டி வேகப்படுத்த வேண்டும். அப்போது தான் சூடாகி முகத்தில் இரத்தவோட்டம் அதிகமாகி மசாஜ் செய்ய ஏற்றவாறு ஆகும். Brinjal Fry Recipe: கத்திரிக்காய் வறுவல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

மசாஜ் செய்யும் போது எப்போதும் கண்கள் தவிர பிற பகுதிகளை கீழிருந்து மேல் நோக்கி மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும். கண்கள் சுற்றிய பகுதிகளுக்கு வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும். கண்களை சுற்றிய பகுதிகள் மிக லேசாக இருப்பதால் அதிக அழுத்தம் கொடுக்காமல் மசாஜ் செய்ய வேண்டும். கழுத்தில் தொடங்கி கன்னம், தாடை, மூக்கு, கழுத்து, காதுபகுதி என தனித் தனியாக மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

உதடுக்கு கீழ் பகுதியிலிருந்து காது வரை வளைவாக நடுவிரல் மூலம் சீரான அழுத்தத்தில் இருகைகளாலும் மாறி மாறி மசாஜ் செய்ய வேண்டும். பின் அதே போல் மூக்கிலிருந்து காது வரை நேராக மேல் நோக்கி மேல்காது வரை மசாஜ் செய்ய வேண்டும்.

நெற்றியிலும் புருவத்துக்கு இடைப்பட்ட பகுதியில் மசாஜ் செய்யும் போது உங்களை நிதானப்படுத்துவதுடன் சருமத்தை மென்மையாக்கும்.

தாடையின் எழும்பு வரியை கீழிருந்து மேல் நோக்கி காதுமுன்புறம் வரை இரண்டு விரலால் மசாஜ் செய்யவும். இவை அனைத்தையும் ஒவ்வொரு பக்கமாக தனிதனியாக செய்ய வேண்டும். நல்ல பலன் கிடைக்க இதே போன்று வாரத்திற்கு மூன்று முறை செய்து வாருங்கள்.

முகக்கொழுப்பை குறைக்க:

  • உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதை விட முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைப்பது மிக சுலபமே.
  • முகத்தை அதிக குண்டாகக் காட்டுவது கன்னம் மற்றும் தாடையின் சதைகளே, இதற்கு வாயின் கீழ் பகுதியை முன்னும் பின்னுமாக அசைக்க வேண்டும். அப்போது கழுத்தில் உள்ள நரம்புகள் தாடை சதை என அனைத்தும் அசையும். இதனால் கழுத்து தாடை பகுதி சதைகள் குறையும். Sankashti Chaturthi 2025: மகா சங்கடஹர சதுர்த்தி.. வழிபாடு செய்ய வேண்டியது ஏன்?!
  • சிறுவயதில் நாக்கால் மூக்கை தொட்டு விளையாடிய விளையாட்டும் ஒரு பயிற்சி தான். அவ்வாறு தொட இயலவில்லை என்றாலும் தங்களால் முடிந்த அளவுக்கு முயற்சிக்க வேண்டும். இதை செய்கையில் கன்னத்தில் கொழுப்புகள் கறைவதை உணரலாம். இதை தினமும் 5 முறை செய்து வரலாம்.
  • கழுத்தை இடப்புறமாக திருப்பி தாடையை முன்புறமாக நீட்டி வைக்க வேண்டும். தங்களால் எவ்வளவு நேரம் அப்படி வைக்க முடிகிறதோ அது வரை முயற்சி செய்யலாம். பின் வலப்புறமும் இதே போல் செய்ய வேண்டும். இதில் முகத்தசைகள் இறுகலடையும். தினமும் இருபுறமும் தலா 5 முறை செய்யவும்.
  • இதில் கழுத்தை மேல் நோக்கி பார்த்து வானத்திற்கு முத்தமிட வேண்டும். இதையும் தினமும் 5 தடவை செய்யலாம். ஒவ்வொரு முறையும் 5 முதல் 8 வினாடிகள் இருத்தல் நல்லது.
  • மீன் வாய் போன்று இரண்டு கன்னங்களையும் உள்ளிலுத்து உதடுகளை 5 நொடிக்கு குவித்து வைக்க வேண்டும். இது கன்னகளில் அழகிய வடிவத்தை ஏற்படுத்தும்.
  • இது மிகவும் சுலபமான பயிற்சி. நன்றாக பற்கள் அனைத்தும் தெரிவது போன்று சிரிக்க வேண்டும். ஒரு 15 முதல் 20 வினாடிகளுக்கு இவ்வாறு வைக்க வேண்டும். இதை 5 முதல் 8 தடவை வரை செய்ய வேண்டும்.
  • கன்னகள் நிறைய காற்றை நிரப்பி 5 வினாடிகளுக்கு வைக்க வேண்டும். பின் பாதி காற்றை ஒரு பக்கமிலிருந்து இன்னொரு பக்கமாக மாறி மாறி நகர்த்த வேண்டும். இவ்வாறு செய்கையில் கன்னத்தின் சதைக் கொழுப்புகள் குறைவதை உணரலாம். இதை ஒரு 3 நிமிடத்திற்கு செய்யலாம்.
  • உங்கள் முகக் கொழுப்புகளுக்கு ஏற்ப நேரத்தை அதிகப் படுத்திக் கொள்ளுங்கள். இவைகளை செய்து முடித்த பின் வாய், கழுத்து, கன்னங்கள் லேசாக வலிப்பது போன்று இருக்கும். அதனால் அப்பகுதிகளுக்கு சிறிது நேரத்திற்கு வேலை கொடுக்காமல் ரிலாக்ஸாக விடுங்கள்.