
மார்ச் 20, ஜான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்பூர் மாவட்டம், பத்லாபூர் குர்த் கிராமத்தில் வசித்து வருபவர் லால் பகதூர் நிஷாத். இவர் தனது மகன், மருமகள், பேரப்பிள்ளைகளுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். கடந்த ஹோலி பண்டிகையின்போது லால் பகதூருக்கும் - பக்கத்து வீட்டில் வசித்து வரும் பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடுமையான வாக்குவாதம் செய்துகொண்ட இருவரும், பின் அவரவர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். இதனிடையே, நேற்று லால் பகதூரின் ஒன்றரை வயதுடைய பேரன் ஷ்ரேயான்ஷ், தனது சகோதரியுடன் வீட்டின் வராண்டா பகுதியில் இருந்தார். லால் பகதூர் மற்றும் பிற குடும்பத்தினர் வெளியே சென்று இருந்தனர். குழந்தையின் தாய் வீட்டுக்குள் பணிகளை கவனித்துக்கொண்டு இருந்தார். வீட்டு வாசலில் இருந்த சிறுவன் திடீரென உரத்த குரலில் கதறி இருக்கிறார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, சிறுவனின் அந்தரங்க உறுப்பு அறுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. Nagpur Violence: நாக்பூர் கலவரம்; முக்கிய புள்ளி கைது.. நடந்தது என்ன..?
குடும்பத்தை பழிவாங்க அதிர்ச்சி செயல்?
இதனால் உடலில் இருந்து தொடர்ந்து ரத்தம் வெளியேறி குழந்தை அலறிய நிலையில், உடனடியாக பத்லாபூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டது. அங்கு சிகிச்சை முடிக்கப்பட்ட, மேல் சிகிச்சைக்காக குழந்தை வாரணாசி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளது. அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் உடல்நலம் கவலைக்கிடமான வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடந்த ஹோலி பண்டிகை அன்று பக்கத்து வீட்டு பெண்ணுடன் நடந்த பிரச்சனை காரணமாக, அவர் பழிவாங்க இச்செயலில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என குடும்பத்தினர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.