
ஜூன் 03, உத்திரபிரதேசம் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் பகுதியில் வசித்து வரும் பெண்மணி சாய்ரா (வயது 20). அதே பகுதியில் வசிப்பவர் ரஃபி. இவர் பெண்ணை காதலிப்பதாக பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்தவர் அவரை ஆபாசமாக திட்டியுள்ளார். அவ்வழியே சென்ற இளைஞர் ஒருவர் இதனை கண்ட நிலையில், ரஃபியை தாக்கியுள்ளார்.
இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை :
இதனால் இளம்பெண்ணுக்கும், அந்த இளைஞருக்கும் தொடர்பு இருப்பதாக எண்ணிய ரஃபி, தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து பெண்ணை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். மேலும் இளம்பெண் எங்கெல்லாம் செல்கிறார் என்பதை கவனித்து வைத்து பின் தொடர்ந்து சென்றுள்ளார். பெண்மணி தனியே இருப்பதை கண்ட ரஃபி அந்த நேரத்தை தனக்கு சாதகமாக உபயோகித்து அவரை தாக்கியுள்ளார். Trending Video: ஆட்டோ ஓட்டுனருக்கு செருப்படி.. வைரல் பெண்மணியின் கதறல் வீடியோ.!
18 இடங்களில் குத்திக்கொலை :
மேலும் தான் வைத்திருந்த ஸ்க்ரூட்ரைவர் கொண்டு பெண்ணை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் வலி பொறுக்காமல் பெண் கதறியழுது என்னை விட்டுவிடு என கண்ணீர் மல்க கெஞ்சவே, முகம், கை, பெண்ணுறுப்பு உட்பட 18 இடத்தில் சரமாரியாக குத்தி கொடூரமாக கொன்று அவரது சடலத்தை வாய்க்காலில் வீசியுள்ளார்.
ரத்த வெள்ளத்தின் பெண்ணின் சடலம் :
வெளியில் சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த வழியாக சென்றவர்கள் பெண்மணி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில் பகீர் :
விசாரணையில் பெண்மணி குறித்த தகவலும், அவர் ரஃபி என்ற இளைஞரால் குத்திக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக ரஃபியை கைது செய்து விசாரித்த போது, தன்னை காதலிக்க மறுத்ததால் பெண்ணை கொன்று வாய்க்காலில் வீசி விட்டு, தனது வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு உறங்கியதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.