Man Create Ruckus with Teachers in Meerut (Photo Credit: @HateDetectors X)

மார்ச் 17, மீரட் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டம், ஜிட்வுலா கிராமத்தில் வசித்து வருபவர் பாப்லா குர்ஜர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, மகள் இருக்கின்றனர். பாப்லாவின் மகள், அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயின்று வருகிறார். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த பாப்லா, மகள் பயின்று வரும் பள்ளிக்குச் சென்றார். போதையில், மேலாடையை கழற்றி கையில் வைத்துக்கொண்டு, இடுப்பில் பாட்டிலை சொருகியபடி சென்றவர், அங்கிருந்த ஆசிரியர்களிடம் தகராறு செய்தார். அம்மாடி.. பாம்புடன் அசால்ட்டாக விளையாடும் குழந்தை.. பயமே இல்லை? நெட்டிசன்கள் கலாய்.! 

போதையில் தகராறு செய்தார்:

மேலும், மதிய உணவு பட்டியலில் எதற்காக கஞ்சி கூழ் இல்லை என கேட்டு வாக்குவாதம் செய்தவர், பெண் ஆசிரியர்களை பார்த்து அநாகரீகமாக பேசினார். மேலும், மாணவ-மாணவிகளை போதையில் வீட்டுக்கு செல்ல மிரட்டினார். இதனால் சம்பவத்தை கேமிராவில் பதிவு செய்த ஆசிரியர்கள், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மீரட் காவல்துறையினர், பாப்லாவை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனிடையே, அரைகுறை ஆடையுடன் பாப்லா குர்ஜர் தகராறு செய்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அவரின் செயல்பாட்டுக்கு சமூக வலைத்தளத்தில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இளைஞர் மதுபோதையில் பள்ளி வளாகத்தில் இருந்த காட்சிகள்:

என் தகப்பன் குடிகாரன் என்பதையே விரும்பாத பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில், குடிகார தந்தையின் செயல், மகளின் மனதில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என நினைத்தாலே நெஞ்சமெல்லாம் பதறுகிறது.

மது தான் முக்கியம் எனில் திருமணமும், குழந்தை செல்வமும் என புகழ், பெயர் எதற்கு?