Baby with Snake (Photo Credit: Instagram)

மார்ச் 16, புதுடெல்லி (Trending News): வனப்பகுதி, வயல்வெளிகளை ஒட்டிய பகுதிகளில் இருக்கும் வீடுகளில் பாம்புகளின் வருகை என்பது மிகவும் பரிட்சயமான ஒன்று ஆகும். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பதைப்போல, பலருக்கும் பாம்பை பார்த்தாலே பயம் என்பது தொற்றிக்கொள்ளும். ஆனால், பாம்பை இலகுவாக கையாளும் நபர்கள், வீடுகளில் நுழையும் பாம்பை எளிதாக கையாண்டு, அதனை ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்களுக்கு அழைத்துச்சென்று விடுவார்கள். இந்நிலையில், பச்சிளம் சிறுமி ஒருவர், தனது இருக்கையில் ஏறி வந்த பாம்பை எளிமையாக கையாளும் வீடியோ வெளியாகி, பாம்பு என கூறினாலே பதறியடித்து ஓடும் நபர்களை மேலும் பரிதவிக்க வைத்துள்ளது. Shocking Video: அதிக இரைச்சலுடன் இசைக்கச்சேரி.. தட்டிக்கேட்ட பெண்ணை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள் கும்பல்.! 

குழந்தையும் - பாம்பு:

இதுதொடர்பான வீடியோ வடமாநிலத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் பாம்புபிடி வீரர் ஒருவர், தனது சமூக வலைதளப்பக்கத்தில் பாம்பு தொடர்பான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் பாம்பை எளிதாக கையாண்டு விளையாடுகிறார். பின் பாம்பு லேசாக தனது குரலை உயர்த்தியதும், அவர் அதனை விட்டுவிடுகிறார். சாரை வகை பாம்பு என்பதால், அதில் விஷம் இருக்காது என பாம்பு பிடி நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும், குழந்தை பாம்புடன் விளையாடுவதை வேடிக்கை பார்க்காமல் இருப்பது நல்லது.

பாம்புடன் சிறுமி விளையாடும் காட்சிகள்:

எந்த விதமான பயமும் இன்றி பாம்பை பிடித்து விளையாடிய சிறுமி: