Visual From Video (Photo Credit : @i X)

ஜூலை 05, மொராதாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத், முஹல்லா, ஷிவ்நகர், ஜெயந்திப்பூர் பகுதியில் வசித்து வருபவர் ரவீந்திர குமார் சிங் (வயது 58). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். ரவீந்திர குமாரின் மனைவி சந்திரகாந்த் சைனி. தம்பதிகளுக்கு மோகித் குமார் என்ற மகன் இருக்கிறார். ரவீந்திர குமார் ஹோண்டா ஷோரூமில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, சம்பவத்தன்று காலை 06:30 மணிக்கு மேல் ரவீந்திர குமார் நிறுவனத்தின் இரும்பு கதவை அடைக்க முற்பட்டுள்ளார். ஓடும் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை.. கான்ஸ்டபிள் கைது..!

விபத்தின் பதறவைக்கும் காட்சிகள்:

அப்போது, திடீரென இரும்பு கதவு சாய்ந்து விழுந்தது. இந்த விபத்து காரணமாக தலையில் படுகாயம் அடைத்த காவலாளி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நொடிகளில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நேரில் வந்து ரவீந்திர குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது விபத்து காட்சிகள் வெளியானது.

நிறுவனத்தின் கதவை அடிக்கும்போது தொழிலாளிக்கு நேர்ந்த சோகம் :