Sitapur 5-Year-Old Boy Dies (Photo Credit: @TheJournalists_ X)

மார்ச் 07, சீதாப்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகித். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். தம்பதிகளுக்கு தானி (வயது 5) என்ற மகள் இருக்கிறார். மோகித்துக்கும் - அவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராமு என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை. ஆனால், மோகித்தின் மகள் சிறுபிள்ளை என்பதால், அவரை ராமு மற்றும் அவரின் குடும்பத்தினர் அன்பாகவே பார்த்துக்கொள்வார்கள் என கூறப்படுகிறது.

சிறுமி கொடூர கொலை:

மோகித் வீட்டில் இல்லாத நேரங்களில், அவ்வப்போது சிறுமி தானி ராமுவின் வீட்டிற்கு சென்று விளையாடி வருவது வழக்கம் ஆகும். இதனிடையே, சம்பவத்தன்று சிறுமி ராமுவின் வீட்டில் இருந்து வெளியே வருவதை கண்டு உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்றுள்ளார். மகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற மோகித், அவரை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக்கினார். பின் அவரின் உடலை வெவ்வேறு இடங்களில் வீசிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு மகள் நீண்ட நேரமாக இல்லை என நாடகம் நடித்து, பிப்.25 அன்று காவல் நிலையத்தில் மகள் மாயமானதாக புகார் அளித்தார். அரசுப்பேருந்து - டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து.. 4 பேர் பலி., 20 பேர் படுகாயம்.. திருத்தணியில் சோகம்.! 

தந்தையின் மீது சந்தேகம்:

இதன்பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். மேலும், மோகித் மகள் மாயாகிவிட்டார், அவரை தேடி வருகிறேன் என மனைவியிடம் செல்போனை கொடுத்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். இதனால் அவர் எங்கே போனார்? சிறுமிக்கு உண்மையில் என்ன நடந்தது? என அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்தனர். இதனிடையே, சிறுமியின் உடல் அங்குள்ள வெவ்வேறு பகுதிகளில் இருந்து துண்டு துண்டாக கைப்பற்றப்பட்டது. சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்த அதிகாரிகள் தீவிரமாக விசாரணையை முன்னெடுத்தனர்.

வெளியானது உண்மை:

இந்நிலையில், சிறுமியின் தந்தை நேற்று உள்ளூர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து சரணடைந்தார். அவர் தனது மகளை ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் தெரிவித்தார். பக்கத்து வீட்டில் இருக்கும் ராமுவின் வீட்டுக்கு செல்லக்கூடாது என மகளை எச்சரித்தும், அவர் கேட்காத காரணத்தால் கொலை செய்தேன் எனவும் கூறி இருக்கிறார். இதனையடுத்து, மோகித்தின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.