Tiruttani Accident Today Spot Visuals (Photo Credit: @manojkumar4043 X)

மார்ச் 07, சோளிங்கர் (Thiruvallur News): திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, சோளிங்கர், மாநில நெடுஞ்சாலை, கே.ஜி கண்டிகை பகுதியில், இன்று மதியம் 03:12 மணியளவில், அரசுப் பேருந்து - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. எதிரெதிர் திசையில் வந்த பேருந்துகளில், டிப்பர் லாரி அதிவேகத்தில் சென்று பேருந்து மீது மோதி விபத்தில் சிக்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், நிகழ்விடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி பேருந்தில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். சிலருக்கு கை-கால் என உடல் உறுப்புக்கள் துண்டாகியதாகவும் கூறப்படுகிறது. Cuddalore Shocker: கஞ்சா விற்பனைக்கு மாணவர்களை வற்புறுத்தி தாக்கிய கும்பல்; கடலூரில் பகீர்.. ஷாக் வீடியோ லீக்.. கதறும் மாணவர்கள்.! 

4 பேர் பலி., 20 பேர் படுகாயம்:

டிப்பர் லாரி மோதிய வேகத்தில், பேருந்தின் முன்பக்கத்தில் பகுதியளவு அப்பளம் போல நொறுங்கியது. இதனால் விபத்தில் உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கிறது. கே.ஜி கண்டிகை பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்க் பகுதியில் நடந்த விபத்தின் பதறவைக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விபத்தில் காயம் அடைந்தோர் திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக விபத்தில் 4 பேர் பலியாகி இருப்பதாகவும், 20 முதல் 30 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட காணொளி: