Corona Virus: இந்தியாவில் கொரோனா திடீர் உச்சக்கட்டம்.. ஒரே நாளில் 564 பேர் பாதிப்பு.. 7 பேர் மரணம்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 4866 பேர் பாதிப்படைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Corona Virus: இந்தியாவில் கொரோனா திடீர் உச்சக்கட்டம்.. ஒரே நாளில் 564 பேர் பாதிப்பு.. 7 பேர் மரணம்.!
Corona Virus (Photo Credit : @bsindia X)

ஜூன் 05, புதுடெல்லி (New Delhi News): கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் (Corona Virus) தொடர்ந்து உலகத்தையே ஆட்டி படைத்தது. இதனால் உலகமே ஊரடங்கு என்ற பெயரில் அடங்கிப் போனது. கொரோனாவால் பல கோடி மக்கள் உயிரிழந்தனர். பின் கொரோனா பாதிப்பு அனைத்தும் முடிவடைந்து, மக்கள் அனைவரும் தற்போது நிம்மதியாக இருந்து வருகின்றனர். RCB Fans Died: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்.. கூட்டநெரிசலில் சிக்கி 6 பேர் பலி., 13 பேர் படுகாயம்.! 

மீண்டும் தலைதூக்கும் கொரோனா :

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் புதிய ஆட்டம் துவங்கியுள்ளதாக உலக சுகாதாரத்துறை அமைப்பு முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கேற்ப நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4866 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பலி எண்ணிக்கை உயர்வு :

அதிகபட்சமாக கேரளாவில் 1487 பேருக்கும், டெல்லியில் 562 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 213 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் டெல்லியில் 2 பேர், கர்நாடகாவில் 2 பேர், மகாராஷ்டிராவில் 3 பேர் என 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Jun 05, 2025 10:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).