Siddaramaiah | PM Narendra Modi (Photo Credit: @CMofKarnataka / @PMOIndia X)

மே 24, புதுடெல்லி (New Delhi): இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (மே 24) 9வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 2021ல் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் திமுக தலைமையிலான அரசு இதுவரை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்தது. இந்நிலையில், கல்வி நிதி விடுவித்தல் உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பிரதமரிடம் நேரடியாக வலியுறுத்த நிதி ஆயோக் கூட்டத்துக்கு நேரடியாக சென்றுள்ளார். வாலிபரை நிர்வாணமாக்கி, கட்டி வைத்து கொடூர தாக்குதல்.. காதலி குடும்பத்தினர் வெறிச்செயல்..!

சித்தராமையா, மம்தா புறக்கணிப்பு:

பிற அனைத்து மாநில முதல்வர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், "தனக்கு உடல்நிலை சரியில்லை. ஆதலால் இன்றைய நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது" என சித்தராமையா தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல, திரிணாமுல் காங்கிரசின் மேற்குவங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் கூட்டத்தை புறக்கணித்து இருக்கிறார். மம்தா பானர்ஜி கூட்டத்தை புறக்கணித்ததால் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.