மார்ச் 22, விஜயபுரா (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா (Vijayapura, Karnataka) மாவட்டம், தேவநாங்காவ் கிராமத்தில் வசித்து வருபவர் சித்தப்ப பூசாரி. தேவநாங்காவ் கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூருக்கு (Hosur, Krishnagiri) மிகவும் அருகில் உள்ள கிராமம் ஆகும். பூசாரியின் மகள் பாக்யா ஸ்ரீ (வயது 31). அங்குள்ள சாஸாபாலு கிராமத்தில் வசித்து வருபவர் சங்கரப்பா தளவார் (வயது 32). இவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.
ஒருவறையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து (Love) வந்ததால், கடந்த 2015ம் ஆண்டு இருவரும் திருமணம் (Marriage) செய்ய முடிவெடுத்துள்ளனர். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சங்கரப்பாவுக்கு பெற்றோரின் வற்புறுத்தலால் வேறொரு திருமணம் நடக்க, திருமணம் முடிந்த 6 மாதங்களில் மனைவியை பிரிந்து, கர்நாடக-தமிழக (Karnataka Tamilnadu Border) எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ள ஜிகினி தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்துள்ளார்.
ஜிகினி பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த சங்கரப்பா, முன்னாள் காதலி பாக்யஸ்ரீயுடன் அவ்வப்போது போனில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளார். இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமானதால், பாக்யஸ்ரீயும் ஜிகினிக்கு வந்து காதலரோடு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளனர். இதற்கிடையில், பாக்யாவின் தம்பி லிங்கராஜ் (வயது 22), தனது சகோதரியை தேடி 2015ம் ஆண்டு ஜிகினிக்கு வந்துள்ளார். Surgery During Earthquake: மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது திடீர் நிலநடுக்கம்.. பதற்றத்திலும் கடமையில் கண்ணாக பணி.!
அங்கு அக்காவும் - அவரின் முன்னாள் காதலரும் ஒன்றாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர், பாக்யஸ்ரீயை கண்டித்துள்ளார். மேலும், சங்கரப்பாவுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்பதால், மற்றொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க வேண்டாம். நீ பிரிந்து வந்துவிடு. உனக்கான துணையை தேடி திருமணம் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளார். ஆனால், பாக்யஸ்ரீ அதனை கேட்கவில்லை.
இந்நிலையில், தங்களின் உல்லாச உறவுக்கு லிங்கராஜ் இடையூறாக இருக்கிறார் என எண்ணிய கள்ளக்காதல் ஜோடி, 20 துண்டுகளாக லிங்கராஜை வெட்டி கொலை செய்து, உடலை அந்நகரின் பல இடங்களில் வீசி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதிக்கு சென்று தலைமறைவாகி குடும்பம் நடத்தி வந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் 8 ஆண்டுகளுக்கு பின்னர், நேற்று பாக்யஸ்ரீ (வயது 39) மற்றும் சங்கரப்பா (வயது 40) ஆகியோரை கைது செய்தனர்.