
மே 13, நொய்டா (Uttar Pradesh): உத்திரபிரதேசம் நொய்டாவில் உள்ள தடாவில் நாய் ஒன்றை நிதின் ஹுன் என்பவர் தனது ஆட்டோவின் பின்புறம் கயிறால் கட்டி இழுத்து சென்றதாக தெரிய வருகிறது. இதனை நேரில் கண்டு அதிர்ந்த சமூக ஆர்வலர் விதித் சர்மா வீடியோ எடுத்து தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போலீசாரையும் டேக் செய்துள்ளார். Trending Video: தாமதமான மின்சார ரயில்.. படிக்கட்டில் தொங்கியபடி பெண்கள் ஆபத்து பயணம்.!!
காயமடைந்த நாய் மருத்துவமனையில் அனுமதி :
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியதை தொடர்ந்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் போலீசாரின் பார்வைக்கும் சென்றுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நிதினை அதிரடியாக கைது செய்து அவர் நாயை இப்படி கட்டி இழுத்துச் சென்றதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காயமடைந்த நாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோவில் கட்டி இழுத்துச்செல்லப்பட்ட நாயின் பதறவைக்கும் வீடியோ :
डाढ़ा गांव ग्रेटर नोएडा- ऑटोरिक्शा में सवार "नितिन हूंण", एक कुत्ते को ऑटो के पीछे बांधकर बर्बरता से घसीटता हुआ। ऐसे लोगों की मानसिक स्थिति इतनी गिरी हुई है, यह लोग समाज के लिए खतरा हैं। इनका सही स्थान जेल है। @KasnaSho @noidapolice @Uppolice कार्यवाही हेतु। धन्यवाद।@dgpup pic.twitter.com/c6Cmhqrbmz
— पार्थ सेमवाल (@advparth9s) May 11, 2025