ஏப்ரல் 19, ஜோத்பூர் (Rajasthan News): சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் பெருகியதை தொடர்ந்து, இந்தியாவுக்கு வெளிநாட்டினர் இலட்சக்கணக்கில் இன்பசுற்றுலா வந்து செல்கின்றனர். ஒரு சில உலகளவிலான யூடியூபர்கள் தங்களின் பயணத்தை விடியோவாக பதிவேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் கொரிய யூடியூபர் (Korean Vlogger) ஒருவர் இந்தியா வந்திருந்தார். இவர் சம்பவத்தன்று இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் (Jodhpur, Rajasthan) நகரின் அழகை சுற்றிப்பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அங்குள்ள மலை கோவில், அரண்மனை போன்றவற்றுக்கு சென்று வந்துள்ளார். WB Missing MLA Mukul Roy Join BJP: காணாமல் போனதாக கூப்பட்ட எம்.எல்.ஏ விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்; பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏ., கொந்தளிக்கும் மம்தா.!

இந்நிலையில், அவர் மலையின் மீது இருந்த கட்டிடத்தை பார்த்துவிட்டு மீண்டும் கீழே இறங்கி வருகையில், உள்ளூரை சேர்ந்த இளைஞர் வெளிநாட்டு பெண்மணியை பார்த்து தனது ஆணுறுப்பை வெளியே எடுத்து காண்பித்து ஆபாச செய்கை செய்துள்ளார்.

இதனால் பதறிப்போன பெண்மணி அதனை வீடியோ எடுத்தவாறு அங்கிருந்து தப்பி வந்துவிட, அதுகுறித்த விடியோவை தனது சமூக ஊடகப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, விஷயம் காவல் துறையினரின் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து, இளைஞரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.