West Bengal Politician Mamata Banerjee, Trinamool Congress Party (Photo Credit: ANI)

ஏப்ரல் 19, கொல்கத்தா (West Bengal News): திரிணாமுல் காங்கிரஸ் (Trinamool Congress Party) கட்சியின் எம்.எல்.ஏ மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் (Mukul Roy), கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானதாக அவரின் மகன் சுபரான்ஷு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், டெல்லிக்கு சென்ற தந்தையை நாங்கள் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிந்து காவல் துறையினர் விசார்ணையை முன்னெடுத்த நிலையில், இன்று மாயமானதாக கூறப்பட்ட எம்.எல்.ஏ முகுல் ராய் செய்தியாளர்களை சந்தித்தார். அது அம்மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, முகுல் ராய் பாஜகவில் (BJP) இணைந்துள்ளார்.

கடந்த மேற்கு வங்க தேர்தலுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட பிரச்சனையில் பாஜகவுக்கு சென்று இணைந்தவர், பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்த பின்னர் திடீரென திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். Meta Layoff: 4 ஆயிரம் உயர்திறன் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது மெட்டா.. முகநூல் நிறுவனத்தின் அதிரடி.!

இதனிடையே மீண்டும் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் எப்போதும் பாஜகவுடனேயே இருந்தேன், அவர்கள் எனக்கு வழங்கும் பணிகளை தொடர்ந்து செய்வேன். திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை, நான் அதில் ஒரு அங்கம் கூட இல்லை. நான் ஏற்கனவே திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிவிட்டேன்" என தெரிவித்தார்.

இந்த விசயத்திற்கு பதில் அளித்துள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee), "முகுல் ராய் ஒரு பாஜக எம்.எல்.ஏ. அது முழுக்க முழுக்க அவரைப் பொறுத்தது. அவர் காணாமல் போனதாக புகாரைப் பதிவு செய்த அவரது மகன் சுப்ரான்ஷிடம் நீங்கள் கேட்க வேண்டும். இது போன்ற போக்கு மிகவும் தீவிரமானது. ஆனால் இது மிகவும் சிறிய பிரச்சினை, நாங்கள் அவரைப்பற்றி கவலைப்படுவதில்லை.

2024ல் பாஜக ஆட்சிக்கு வராது. 2021ல் வங்காளத் தேர்தலில், "200 பார்" என்று சொன்னார்கள், ஆனால் டெல்லியில் அவர்களால் (2024 தேர்தல்) 200ஐ கூட எட்ட முடியாது. பாஜக மத்திய ஆட்சியில் இருக்கிறது. அதனால்தான் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள்.

ஆனால் அதிகாரம் தற்காலிகமானது, நாற்காலி வரலாம், போகலாம் ஆனால் ஜனநாயகம் என்றென்றும் தொடரும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அரசியலமைப்பு என்றென்றும் தொடரும், சில திருத்தங்கள் இருக்கலாம். ஆனால் இந்த அரசியலமைப்பை புல்டோசர் மூலம் தகர்க்க முடியாது. அதனால்தான் அவர்கள் (பாஜக) வரும் 2024 தேர்தலில் வெற்றி பெற மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.