Acid Attack - Murder File Pic (Photo Credit: Pixabay)

மே 20, குவாலியர் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர், ராம் துவரா பகுதியை சேர்ந்த நபர் அமித் பன்சால். இவரின் மனைவி சுவேதா. தம்பதிகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

அமித் பன்சாலுக்கு வேறொரு பெண்மணியுடன் பழக்கம் ஏற்படவே, இருவரும் கள்ளக்காதல் வயப்பட்டு தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அமித் பன்சாலின் கள்ளக்காதலி அமித்திடம் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில், திருமணத்தில் விருப்பம் இல்லாத அமித் தனக்கு திருமணம் ஆகியுள்ள நிலையில் உன்னை எப்படி திருமணம் செய்வது? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அமித்தின் கள்ளக்காதலி சம்பவத்தன்று கள்ளகாதலரின் வீட்டிற்கு சென்று ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். அங்கு அமித் இல்லாததால், அவரின் மீதான ஆத்திரம் அவரது குடும்பத்தினரை தாக்கியுள்ளது. Tuticorin Sea coast: ரூ.31 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸ் கடத்தி வந்த நால்வர் கைது; தூத்துக்குடியில் கடற்படை அதிரடி..! 

இந்த சம்பவத்தில் 40% தீக்காயம் அடைந்த அமித்தின் மனைவி சுவேதா உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் குடும்பத்தினர் 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிந்து அமித்தின் கள்ளக்காதலியை தேடி வரும் நிலையில், அவர் கள்ளகாதலர் தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து 5 ஆண்டுகளாக பலாத்காரம் செய்தார் என காவல் நிலையத்தில் புகார் அளித்து தலைமறைவாகியுள்ளார். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.