MS Dhoni Surprise to Fan (Photo Credit: @ChennaiIPL X)

மே 03, சென்னை (Cricket News): கிரிக்கெட் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடித்தீர்க்கும் ஐபிஎல் 2024 (Indian Premier League 2024) போட்டிகள் விறுவிறுப்புடன் இந்தியாவில் உள்ள வெவ்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. 10 அணிகளில் கலந்துகொள்ளும் போட்டியில் நடக்கும் 74 ஆட்டங்களும் விறுவிறுப்பாக இருக்கும். இவற்றில் சென்னை, மும்பை, பெங்களூர், ராஜஸ்தான், டெல்லி, ஆகிய அணிகளுக்கு இடையேயான ஆட்டங்கள் முக்கியத்துவம் பெரும். பலகோடி ரசிகர்களின் இரவு நேரங்களை கடந்த சில வாரங்களாக ஆட்கொண்டு இருக்கும் ஐபிஎல் சீசனில் சென்னை அணி மொத்தமாக 10 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் தான் எதிர்கொண்ட 10 போட்டிகளில் 5 ல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகள் மற்றும் +0.627 ரன்ரேட் விகிதத்துடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. மொத்தமாக 2024 ஐபிஎல் தொடரில் 50 ஆட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன. இன்னும் 24 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன.

விறுவிறுப்பாக நடக்கும் ஐபிஎல் (IPL 2024) ஆட்டம்: ஐபிஎல் தொடரை பொறுத்தமட்டில் புள்ளிப்பட்டியலின்படி முதல் 4 இடங்களுக்குள் இருக்கும் அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு நடைபெறும் என்பதால், அணியின் வெற்றிக்காக முதல் 6 இடங்களில் இருக்கும் அணிகள் தீவிர முயற்சியை எடுத்து வருகின்றன. இவற்றில் பெங்களுர், மும்பை, குஜராத் அணியின் அரையிறுதி தேர்வுசுற்று தகுதியும் கேள்விக்குறியாகி வருகிறது. சென்னை (Chennai Super Kings CSK) அணியை பொறுத்தமட்டில் இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. இவற்றில் சென்னை அணி தொடர்ந்து வெற்றிபெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றுக்கு தேர்வாகும். World Press Freedom Day 2024: இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண்.. உலக பத்திரிகை சுதந்திர தினம்...! 

103 வயது சிஎஸ்கே ரசிகருக்காக தோனியின் அன்பு பரிசு:

ரசிகரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய தோனி: ஒரு தோல்வி கூட பிற அணிக்கான வாய்ப்பை வழங்கிவிடும் என்பதால், அந்த அணியினர் கவனமாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் கேப்டன், நட்சத்திர நாயகன் தோனி (MS Dhoni), வயதான சென்னை அணியின் ரசிகருக்கு தனது டீசரில் நன்றி தெரிவித்து கையெழுத்திட்டு இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். சென்னையை சேர்ந்த 103 வயதான கிரிக்கெட் ரசிகர் எஸ். ராமதாஸ் சென்னை அணியின் விசிறி ஆவார். அவருக்கு தோனி நன்றி தெரிவித்து, தனது கையெழுத்திட்ட டீசர்ட் ஒன்றை வழங்கி இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. Dubai Floods: மீண்டும் துபாயில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. தத்தளிக்கும் பாலைவன துபாய்..! 

சென்னை அணியின் சீனியர் ரசிகர்: இந்த இன்ப அதிர்ச்சி பரிசை பெற்றுக்கொண்ட முதியவர் ராமதாஸ், "நான் வயதானவன் இல்லை. நான் சீனியர் கிரிக்கெட் ரசிகர். எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். டெல்லிக்கு என்னை கிரிக்கெட் பார்க்க அழைத்தாலும் நான் வருவேன். சேப்பாக்கத்தில் சென்னை அணியின் ஆட்டத்தில் நேரில் கலந்துகொள்ள தோனி என்னை அழைத்தாலும் செல்வேன். நான் கிழவன் இல்லை, மூத்த வாலிபர் (Senior Valiban)" என கூறினார். முதியவர் ராமதாஸ் உடுமலைப்பேட்டையை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். அவர் கடந்த 1920ம் ஆண்டு பிறந்து, நன்கு பிடித்து பின்னாளில் பிரிட்டிஷ் இராணுவத்திலும் இணைந்து பணியாற்றி இருக்கிறார். திருச்சி சரகத்தில் பணியாற்றி தற்போது 103 வயதை எட்டி இருக்கிறார். விரைவில் அவருக்கு 104 வது பிறந்தநாள் வருகிறது. தினமும் அவர் ஐபிஎல் போட்டிகளை வீட்டில் இருந்தபடி கண்டுகளிக்கிறார்.

முதியவர் எஸ். ராமதாஸின் பேட்டியை கண்டு மகிழ: