Windows 11 Outage (Photo Credit: @GovtGlimpse X)

ஜூலை 19, புதுடெல்லி (New Delhi): வணிக வளாகங்கள் முதல் ஐடி நிறுவனங்கள், இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என கணினியின் பயன்பாடு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின் அபரீதமாகியுள்ளது. பல்வேறு அரசு மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் கணினி இன்றியமையாத பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று மதியம் 11 மணிக்கு மேல் உலகளவில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 ஓஎஸ் இயங்குதளம் செயலிழப்பு ஏற்பட்டது. Scam Alert: முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் போட்டோ வைத்து மோசடி; மகன் பலாத்கார வழக்கில் சிக்கியதாக மிரட்டல்..!

தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் தீவிரம்:

இதனால் உலகளவில் பயனர்கள் தங்களின் மடிக்கணினி, கணினி உட்பட விண்டோஸ் 11 ஓஎஸ் பதிவு செய்யப்பட்ட சாதனங்களை பயன்படுத்த இயலாமல் திணறிப்போயினர். ஆன்லைன் முன்பதிவு மையங்கள், விமான சேவைகள், இரயில் சேவைகள், பங்கு முதலீட்டு சந்தை சேவைகள் உட்பட பல கணினி சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டன. அதனை சரி செய்யும் பணியில் மைக்ரோசாப்ட் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். Microsoft Windows Crash News: விண்டோஸ் 11 ஓஎஸ் செயலிழப்பு.. உலகளவில் பாதிக்கப்பட்ட பல துறைகள்.. சரிசெய்யும் முறைகள் என்னென்ன?! 

மத்திய ஐடி துறை அமைச்சர் விளக்கம்:

இந்நிலையில், இந்த விஷயம் குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய இரயில்வே மற்றும் ஐடி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தனது எக்ஸ் பக்கத்தில், "உலகளவில் மைக்ரோசாப் விண்டோஸ் ஓஎஸ் 11 செயலிழப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் மைக்ரோசாப்ட் மற்றும் அதன் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். சிகளுக்கான காரணம் கண்டறியப்பட்டு விரைவில் தீர்வுகள் வெளியாகி புதுப்பிப்பு பணிகள் நடைபெறும். ஸியரட் (CERT) தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குகிறது. என்ஐசி (NIC) நெட்ஒர்க் அமைப்பு பாதிக்கப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.