Parliament of India / PM Modi (Photo Credit : wikipedia / FB)

ஜூன் 04, புதுடெல்லி (New Delhi News): இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 21ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜூலை 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Breaking: லாரி - வேன் மோதி கோர விபத்து... ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் துள்ளத்துடிக்க பலி.! 

மத்திய அரசிடம் கேள்வி எழுப்ப திட்டம் :

ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரம் மட்டுமல்லாது இந்தியாவில் நிலவும் பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை தொடர்ந்து பொதுவெளியில் முன்வைத்து வரும் நிலையில், நாடாளுமன்றத்திலும் விவாதம் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.