Sexual Abuse | Court Judgement, Both File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 21, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, குர்லா பகுதியைச் சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளார். இவருக்கு மூத்த சகோதரர் ஒருவர் இருந்த நிலையில், அவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுனரின் சகோதரர் உயிரிழந்துவிடவே, அவரது மனைவியை திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுநர், ஒரே குடும்பமாக வசித்து வந்துள்ளார்.

அண்ணன் மகள் மீது மோகம்: மேலும், அவரது மகளையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 2019ம் ஆண்டில் கயவனின் பார்வை தனது அண்ணன் மகளின் மீது திரும்பி இருக்கிறது. அப்போது சிறுமி 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். சிறுமி சத்தமிடவே, அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து சென்றுள்ளார்.

சிறுமியை கட்டாயப்படுத்தி, மிரட்டி பலாத்காரம்: பின்னர், அதே நாளில் அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்தவர், சிறுமியை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். கத்தினால் உன்னை குத்தி கொலை செய்து விட்டு, உனது தாயையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இந்த கொடூரத்தை அரங்கேற்றுகிறார். இதே செயல் ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்து இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு கட்டத்திற்கு மேல் நிலைமையை தாயின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். Man Kills Wife For Late Tea: டீ ரெடி பண்ண 10 நிமிடமா?: ஆத்திரத்தில் மதியிழந்த கணவனால் துண்டிக்கப்பட்ட மனைவியின் தலை.. நெஞ்சை பதறவைக்கு கொடூரம்.! 

தாயின் புகாரின் பேரில் நடவடிக்கை: இதனைக்கேட்டு அதிர்ந்துபோன தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் வளர்ப்பு தந்தையை சிறையில் அடைத்தனர். இந்த விஷயம் தொடர்பான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், சிறுமியை பலாத்காரம் செய்த தந்தைக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தனர்.

நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு: அதுமட்டுமல்லாது, ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்தனர். விசாரணையின் போது ஆட்டோ ஓட்டுனரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரைஸ் கான், பெண்ணின் தந்தை முறை கொண்டவர் பெண்ணின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதற்கு தனது வளர்ப்பு தந்தையை பழிவாங்கும் பொருட்டே அவரது தாய் மற்றும் மகள் சேர்ந்து இவ்வாறான வழக்கை கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால், மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டு, குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.