மே 17, மும்பை (Technology News): நடிகர் விஷால் (Actor Vishal) - ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த 2018ல் வெளியான திரைப்படம் இரும்புத்திரை (Irumbu Thirai). இந்த திரைப்படம் தொழில்நுட்பம் (Technology) மற்றும் நமது அடையாள அட்டைகளை (Personal Identify Card) பயன்படுத்தி நடைபெறும் திருட்டு தொடர்பான மோசடிகளை மையப்படுத்தி கதைக்களம் இருந்தது. படத்தில் நமது தனிப்பட்ட தகவல்கள் எப்படியெல்லாம் வேறொரு நபருக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பவை எடுத்து காண்பிக்கப்பட்டன.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், மும்பை (Mumbai, Maharashtra) காவல் துறையினர் சட்டவிரோதமாக கிடைக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வாங்கப்பட்ட 30 ஆயிரம் சிம்கார்டுகளை (Sim Cards Scam) முடக்கி இருக்கின்றனர். இவைகளில் ஒரே நபரின் பெயரில் குறைந்தது 600-க்கும் அதிகமான சிம் கார்டுகள் அதிகபட்சமாக வாங்கப்பட்டுள்ளது. Ranipet Murder: பச்சிளம் சிறுமியை கொலை செய்த சித்தி; இரண்டாவது மனைவிக்காக மகளை பலி கொடுத்த தந்தை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
ஒரு குழுவாக செயல்பட்டு இணைந்த மோசடியாளர்கள், 62 குழுக்கள் மூலமாக சுமார் 8,247 பேர் சேர்ந்து இவ்வாறான செயலை செய்துள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் குறைந்தது தலா 50 பேர் வரை இணைந்து இருக்கின்றனர். இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி மோசடியாக சிம்களை வாங்கி குவித்துள்ளனர்.
சமீபத்தில் தொலைத்தொடர்புத்துறை மேற்கொண்ட பரிசோதனையின் அடிப்படையில் சிம் கார்டுகளை மோசடியாக வாங்கியுள்ளது உறுதியாக, அவர்கள் காவல் துறையினர் உதவியுடன் அனைத்து சிம்களையும் முடக்கி இருக்கின்றனர். இவற்றை சட்டவிரோத அல்லது இணையவழி குற்றங்களுக்கு உபயோகம் செய்ததும் அம்பலமாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக மும்பையில் உள்ள மலபார் ஹில், வி.பி மார்க், டி.பி மார்க், டி.என் நகர், சாஹர், பங்குர் நகர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.