பிப்ரவரி 12, பாட்னா (Bihar News): பீகார் மாநில அரசியலில் கடந்த சில நாட்களாகவே அசாதாரண சூழ்நிலையானது நிலவி வந்தது. அங்கு நிதிஷ் குமாரின் ஜனதா கட்சி தலைமையிலான கூட்டாட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சமீபகாலமாகவே பீகாரில் நடைபெற்று வந்த அரசியல் பிரச்சனை காரணமாக நிதிஷ் குமார் தனது கூட்டணியில் இருந்து விலகி, பாஜக - ஜனதா கட்சி இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியமைக்க ஏற்பாடுகள் செய்தார். MS Dhoni Cool Look: "பேரமைதிக்குள் ஒரு புயல்" தல தோனியின் புது லுக்.. அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
இதற்காக மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியவர், பாஜக - ஜனதா கட்சி சார்பில் ஆட்சியமைக்கவும் முயற்சியை மேற்கொண்டார். ஆளுநரும் எம்.எல்.ஏக்கள் ஆதரவை உறுதி செய்ய அதிகாரம் வழங்கவே, இன்று அதற்கான வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக 129 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இதனையடுத்து, நிதிஷ் குமார் அம்மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார். Hyderabad Shocker: அம்மாவும் - மகளும் செய்யிற வேலையா இது? பாஜக பிரமுகரை ஹனி ட்ராப்பில் வீழ்த்தி கொடூர கொலை.. அதிரவைக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி.!
2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்வைக்கும் கருத்துக்கள், பீகாரில் நிதிஷ் குமாருக்கு எதிராக அமையும் வண்ணம் இருந்தன. இதனால் கூட்டணிக்குள் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதிஷ் குமார் அதிரடியாக தனது ப்தாஹவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, தற்போது மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்கிறார்.