பிப்ரவரி 16: கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார் (Nalin Kateel) கட்டீல் கடந்த 14ம் தேதி பொதுக்கூட்டத்தில் பேசுகையில், நாங்கள் இராமர், ஹனுமான் (Sri Rama, Hanuman Devottes) பக்தர்கள். திப்புவின் (Tipu Sultan) தோன்றல்கள் இல்லை. அவர்களுக்கு இங்கு இடமில்லை. நாங்கள் திப்புவின் வழித்தோன்றலை திருப்பி அனுப்புவோம். அவர்களுக்கு இங்கு இடமில்லை" என சர்ச்சையான வகையில் பேசினார். இதற்கு பதிலளித்துள்ள அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM MP Owaisi) நிறுவன தலைவர் அசாதுதீன் ஓவைஸி (Asaduddin Owaisi), "கர்நாடக மாநில பாஜக தலைவரின் கூற்றுகளை பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஏற்றுக்கொள்கிறாரா?. நான் திப்பு சுல்தானின் பெயரை கூறுகிறேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம். அவர்களின் பேச்சுக்களை கொலை, இனப்படுகொலைக்கான அழைப்பாக நான் கருதுகிறேன்" என கண்டனம் தெரிவித்தார். Tripura Elections 2023: திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சியே – வாக்கை பதிவு செய்து முதல்வர் மாணிக் சாகா பரபரப்பு பேட்டி.!
I am taking Tipu Sultan's name, let me see what you will do. Does the PM agree with what the Karnataka BJP president has said? This is an open call for violence, murder & genocide. Will BJP govt in Karnataka not take action against this? This is hatred: AIMIM MP Owaisi pic.twitter.com/fIlhDXivBV
— ANI (@ANI) February 16, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)