ஜூலை 09, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மது போதையில் வகுப்பறைக்கு வந்துள்ளார். பின் வகுப்பறையில் படுத்து உருண்டவர், மேசை, நாற்காலியை கீழே தள்ளி கத்தி ரகளை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இந்த வீடியோவை தனது எக்ஸ தள பக்கத்தில் பகிர்ந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா முதலமைச்சர் அவர்களே? பள்ளி மாணவ, மாணவியர் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு? என சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு.. 2,299 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?.!
மதுபோதையில் ரகளை செய்த ஆசிரியரின் விடியோ (Manapparai Teacher Video) :
பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், மதுபோதையில் வகுப்பறைக்கு வந்திருக்கிறார் ஆசிரியர் ஒருவர்.
ஏற்கனவே, திருச்சி மாவட்டத்தில், வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் மாணவ மாணவியர் கல்வி… pic.twitter.com/kwi8bbhiz6
— K.Annamalai (@annamalai_k) July 8, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)