Kolkata Underwater Metro | PM Modi with Students (Photo Credit: @ANI X)

மார்ச் 06, கொல்கத்தா (Kolkata News): மேற்குவங்கம், கொல்கத்தாவில் ஹூக்ளி நதியின் கிழக்கு-மேற்கு கரையை இணைக்கும் வகையில் நீருக்கடியில் ரூ.15,400 கோடி மதிப்பில் மெட்ரோ (Metro) கட்டுமான பணி நடைபெற்றது.  மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக முடிந்தது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஹவரா மெய்டன்-எஸ்பிளனேட் இடையிலான ரயில்வழித்தடம் நீருக்கு அடியில் அமைக்கப்பட்டது.

பிரதமர் மோடி வருகை: இந்தியாவில் முதன்முறையாக, நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார். கொல்கத்தா மெட்ரோ ரயில்வே துறை மேலாளர் உதய்குமார் ரெட்டி கூறியதாவது, “மெட்ரோ ரயில்தடம் நீர் மட்டத்திலிருந்து சுமார் 16 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மாணவர்களுடன் கலந்துரையாடல்: மேலும், நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் எனவும், மெட்ரோ ரயிலில் தினம்தோறும் சுமார் 7 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.