
ஜூன் 03, கோரக்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரைச் (Gorakhpur) சேர்ந்த 2 உறவினர் சகோதரிகள் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ஒரு வழக்கு விசாரணை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகாரை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி கீதா இன்ஸ்டாகிராமில், இரண்டு சிறுமிகளிடம் பழகி, 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வேலை, இலவச உணவு மற்றும் தங்குமிடம் இலவசம் என ஆசை காட்டி பீகாருக்கு வருமாறு கூறியுள்ளார். Kamal Hassan: கன்னட மொழி சர்ச்சை பேச்சு.. பின்வாங்கிய கமல்.. பரபரப்பு அறிவிப்பு.!
தம்பதி கைது:
இதனை நம்பி ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு, வலையில் சிக்கிய இரு சகோதரிகளும் கடந்த மே 23ஆம் தேதி அன்று குடும்பத்திற்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினர். இதன் பின்னர், கீதா தனது 2 பேரை ரயில் நிலையத்திற்கு அனுப்பியுள்ளார். பின்னர், இருவரும் பீகாரில் உள்ள பூர்னியாவுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுகுறித்த விசாரணையில், கீதா மற்றும் அவரது கணவர் மகேஷ் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.