ஏப்ரல் 05, ராஜஸ்தான் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர், கர்னி விஹார் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த காவல் ஆய்வாளரின் மகன் சஜிதிஷ் சர்மா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்தார். காவல் ஆய்வாளர் தனது (Inspector Son Killed Innocent) மகனை கட்டுப்படுத்த முயன்றும் பலன் இல்லை. காய்கறி விற்பனை செய்துகொண்டு இருந்த நபர் கொலை செய்யப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மகனை காப்பாற்ற முயன்றுள்ளார். இறுதியில் சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகி உண்மை அம்பலாகவே, காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்தனர். மேலும், பலியானவர் குறித்து விசாரிக்கையில், அவர் ஆக்ராவை பூர்வீகமாக கொண்ட காய்கறி விற்பனை செய்யும் தொழிலாளி மோகன் குமார் என்பது தெரியவந்தது. வீட்டின் வாசலில் நடந்த வாக்குவாத சம்பவத்தில் இச்சோகம் நடந்துள்ளது. Kidnap Drama Tragedy: பெற்றோரிடம் ரூ.30 இலட்சம் பறிக்க கடத்தல் நாயகம்; வெளிநாடு படிப்பு ஆசையில் புத்திமாறி நடந்த பகீர் சம்பவம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)