
பிப்ரவரி 17, சென்னை (Sports News): 2025ம் ஆண்டுக்கான 18 வது டாடா இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் (18th TATA IPL Premier League 2025) போட்டிகள், மார்ச் மாதம் 22, 2025 முதல் தொடங்கி, மே மாதம் 25, 2025 வரை நடைபெறுகிறது. இந்திய அளவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings), டெல்லி கேபிட்டல்ஸ் (Delhi Capitals), குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders), லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Lucknow Super Giants), மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians), பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings), ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bengaluru), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) ஆகிய அணிகள் மோதுகின்றன. IPL Schedule Full List in Tamil: டாடா ஐபிஎல் 2025 போட்டிகள்.. எந்த ஆட்டம் எப்போது? எங்கு? முழு விபரம் தமிழில் இதோ.!
ஐபிஎல் அதிக வெற்றியாளர்கள்:
ஒவ்வொரு ஆட்டமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். கடந்த 2024 ஐபிஎல் சீசன் வரை அதிக கோப்பையை பெற்ற அணிகளின் பட்டியலில் தலா 5 கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முன்னணி பெற்றுள்ளன. சென்னை அணி 5 முறை இறுதிப்போட்டி வரை வந்து வெற்றிவாய்ப்பை தவறவிட்டது. 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் முன்னதாகவே நடைபெற்று முடிந்த நிலையில், 2025 ஐபிஎல் (IPL 2025 Schedule in Tamil) போட்டி அட்டவணை நேற்று வெளியானது. அதன்படி, லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டங்களில் பட்டியலை இந்த செய்தித்தொகுப்பில் வழங்குகிறது. IPL Schedule PDF Download: ஐபிஎல் 2025 போட்டி அட்டவணை பிடிஎப் பைல் பதிவிறக்கம் செய்வது எப்படி? விபரம் உள்ளே.!
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் (Chennai Chepauk Ma Chidambaram Cricket Stadium):
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, மெரினா கடற்கரையோரம் அமைந்துள்ள சென்னை சேப்பாக்கம், மா. சிதம்பரம் (M. A. Chidambaram Stadium) கிரிக்கெட் மைதானம், 38,200 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை காணும் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் ஆகும். கடந்த 1934 முதல் பயன்பாட்டில் இருக்கும் கிரிக்கெட் மைதானம், தற்போது வரை தேசிய, சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளை கண்டு வருகிறது. பார்வையாளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு வசதிகளும் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் பிசிசிஐ பொதுச்செயலாளர் மா. சிதம்பரத்தின் நினைவாக, சென்னை கிரிக்கெட் மைதானத்திற்கு மா. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் என பெயரிடப்பட்டது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானம் போல, பல ஆண்டுகள் பெருமை கொண்ட மைதானகளில் ஒன்றாக சென்னை கிரிக்கெட் மைதானம் இருக்கிறது. கடந்த 2011, 2012, 2024 ஆகிய ஐபிஎல் போட்டிகளின் இறுதி ஆட்டங்கள் சென்னை மா. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. சுதந்திரத்திற்கு முன்னரில் இருந்து பயன்பாட்டில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில், சென்னை மா. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் முக்கியமானது ஆகும். IPL 2025: ஐபிஎல் 2025 போட்டிகள்.. முழு பட்டியல் இதோ.!
இந்தியன் பிரீமியர் லீக் 2025:
2025 ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22 முதல் தொடங்கவுள்ள நிலையில், முதல் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் அதே கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் 2025 போட்டிகளை நிறைவு செய்கிறது. இனி சென்னை மா. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டம் குறித்த பட்டியலை காணலாம்.
ஐபிஎல் தொடரில், போட்டி எண் 3:
தேதி & கிழமை: 23 மார்ச் 2025 & ஞாயிற்றுக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (Chennai Super Kings Vs Mumbai Indians)
இடம்: சென்னை
ஐபிஎல் தொடரில், போட்டி 8:
தேதி & கிழமை: 28 மார்ச் 2025 & வெள்ளிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (CSK Vs RCB)
இடம்: சென்னை
ஐபிஎல் தொடரில், போட்டி 20:
தேதி & கிழமை: 05 ஏப்ரல் 2025 & சனிக்கிழமை
தொடங்கும் நேரம்: மாலை 03:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ்
இடம்: சென்னை
ஐபிஎல் தொடரில், போட்டி 29:
தேதி & கிழமை: 11 ஏப்ரல் 2025 & வெள்ளிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இடம்: சென்னை
ஐபிஎல் தொடரில், போட்டி 48:
தேதி & கிழமை: 25 ஏப்ரல் 2025 & வெள்ளிக்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இடம்: சென்னை
ஐபிஎல் தொடரில், போட்டி 54:
தேதி & கிழமை: 30 ஏப்ரல் 2025 & புதன்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
இடம்: சென்னை
ஐபிஎல் தொடரில், போட்டி 68:
தேதி & கிழமை: 12 மே 2025 & திங்கட்கிழமை
தொடங்கும் நேரம்: இரவு 07:30
மோதிக்கொள்ளும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
இடம்: சென்னை
சென்னை அணிக்கு எதிரான 7 ஆட்டங்கள், சென்னையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியிலும் (IPL 2025 Watching Live Broadcast) பார்க்கலாம்.