Mohammad Shami & Soumya Sarkar (Photo Credit: @MidnightMusinng / @rifat0015 X)

பிப்ரவரி 20, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியின் இரண்டாவது ஆட்டம், துபாயில் இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - வங்கதேசம் தேசிய கிரிக்கெட் அணி (India Vs Bangladesh Cricket) இடையே இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் ஹுசைன் பேட்டிங் தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி பந்துவீசுகிறது. IND Vs BAN: டாஸ் வென்று வங்கதேசம் அணி பேட்டிங் தேர்வு; ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: வீரர்கள் அப்டேட் இதோ.! 

2 ஓவரில் நடந்த 2 விக்கெட்;

இந்நிலையில், முதல் ஓவர் முடிவில் முகமது ஷமி வீசிய பந்தில், பேட்டிங் செய்த வங்கதேச அணியின் வீரர் சௌம்யா சர்க்கார் (Soumya Sarkar) அவுட்டாகி வெளியேறினார். வங்கதேச அணியின் ஓப்பனிங் பிரிவில், மிகவும் கவனிக்கப்படும் வீரரான சர்க்கார், அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவர் ஆவார். அவரின் விக்கெட் முதல் ஓவரிலேயே பறிபோனது. முகமது ஷமி (Mohammad Shami) முதலில் வீசிய 6 பந்துகளில், எதிர் அணியை 1 ரன்கள் மட்டுமே அடிக்க விட்டிருந்தார். மேலும், சௌம்யா தான் எதிர்கொண்ட 5 பந்துகளில் ரன்கள் ஏதும் அடிக்காமல் வெளியேறினார்.

அதேபோல, இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தில் ஹர்ஷித் ராணா (Harshit Rana) தனது விக்கெட்டை உறுதி செய்தார். வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் (Najmul Hossain Shanto), 2 பந்துகளில் ரன்கள் ஏதும் அடிக்காமல் வெளியேறினார். சுமார் 10 பந்துகளுக்குள் 2 ரன்களுக்கு வங்கதேசம் 2 விக்கெட் இழந்து திணறிப்போனது.

2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த வங்கதேசம்:

முகமது ஷமியின் ஓவரில் முதல் விக்கெட் பறிபோனது:

முதல் ஓவரில் விக்கெட் எடுத்து அசத்திய முகமது ஷமி: