ஜூலை 23 , மேடக் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நர்சிங்கி பகுதியில் இருந்து செங்குண்டா பகுதிக்கு பாரத் ராஷ்ட்ர சமிதி (Bharat Rashtra Samithi - BRS) கட்சியின் மூத்த தலைவர் தவுரியா நாயக் (வயது 45), அவரின் மகன் அங்கித் கட்சி (வயது 19) நிகழ்ச்சிக்காக தங்களின் காரில் சென்றுகொண்டு இருந்தனர்.
இவர்களின் கார் நர்சிங்கி, வல்லுறு பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக டயர் வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலைத்தடுப்பை மீறி எதிர்திசைக்குள் பாய்ந்து, அவ்வழியே வந்த காரின் மீது பயங்கரமாக மோதியது. Bus Accident: ஓட்டுனரின் அலட்சியத்தால் பயங்கரம்; குளத்தில் பேருந்து கவிழ்ந்து 17 பேர் பலி, 35 பேர் படுகாயம்.. உயிர்தப்பியவர்கள் பகீர் வாக்குமூலம்.!
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பி.ஆர்.எஸ் கட்சியின் தலைவர் தவுரியா நாயக் மற்றும் அவரின் மகன் அங்கித் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இருவரின் உடலும் மீட்கப்பட்டு ராமாயண்பேட் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் அக்கட்சியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.