Young Man Suicide: காதலியை கரம் பிடிக்க முடியவில்லையே..! விரக்தியில் வாலிபர் தற்கொலை..!

சேலத்தில் காதலியை கரம் பிடிக்க முடியவில்லை என வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young Man Suicide: காதலியை கரம் பிடிக்க முடியவில்லையே..! விரக்தியில் வாலிபர் தற்கொலை..!
Poison Suicide (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 22, சேலம் (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் பிரகாஷ் (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற பிரகாஷ் குடும்பத்தினர் தனது மகனுக்கு உங்களது மகளை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் வீடு கட்டி முடியுங்கள், அதன்பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று காதலியின் வீட்டில் கூறியுள்ளனர். Medicinal Benefits Of Pumpkin: பூசணியின் மருத்துவ பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

இதனையடுத்து, பிரகாஷ் சொந்த வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், காதலியுடன் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பிரகாஷ் தனது பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். ஆனால், அவர்கள் இதற்கு காலதாமதம் செய்துவந்துள்ளனர். மறுபுறம் காதலியின் வீட்டில் அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரகாஷ், தனது காதலியை திருமணம் செய்துகொள்ள முடியவில்லையே என்ற விரக்தியில், நேற்று முன்தினம் மதிய வேளையில் பூச்சிக்கொல்லி விஷ மாத்திரைகளை (Poison Tablets) சாப்பிட்டுவிட்டு, வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

(The above story first appeared on LatestLY on Apr 22, 2024 03:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).