Syria wants Help: தனது நாட்டு மக்களுக்கு உதவி செய்ய இந்தியர்களுக்கு கோரிக்கை வைத்த சிரியா.. வங்கிக்கணக்கு விபரங்கள் இதோ.!
2 நாட்களில் துருக்கி-சிரியா 19 ஆயிரம் மக்களை நிலநடுக்கத்தால் இழந்துவிட்ட நிலையில், இந்தியாவில் உள்ள சிரியா தூதரகம் வழியே இந்திய மக்கள் சிரியாவுக்கு உதவி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தங்களால் இயன்ற பணம், துணி, மளிகை பொருட்கள் போன்றவற்றை வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 09, டெல்லி: துருக்கி, சிரியா, லெபனான் (Turkey Syria Earthquake) நாடுகளில் கடந்த பிப். 6ம் தேதி ஏற்பட்ட அதிபயங்கர (Massive Earthquake) நிலநடுக்கத்தால், 2 நாட்களில் 19,300க்கும் மேற்பட்டோர் தற்போது வரை பலியாகியுள்ளனர். அங்குள்ள பல அடுக்குமாடி கட்டிடங்கள் (Apartment Buildings) இடிந்து விழுந்துள்ளதால், மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. ஏற்கனவே உள்நாட்டு போர், பிற நடுகல் விதித்த பொருளாதார தடை என அவதிப்படும் சிரியாவுக்கு நிலநடுக்கத்தால் (Syria Needs Help) பெரும் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியர்கள் தங்களால் இயன்ற நிதிஉதவி அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உங்களால் முடிந்த ரூ.1 கூட அவர்களுக்கு பேருதவி செய்யும். உதவியை பணமாக, பொருளாக வழங்க நினைப்போர் கீழுள்ள வங்கிக்கணக்குக்கு அனுப்பலாம் அல்லது தொடர்புகொள்ள வழங்கப்பட்டுள்ள சிரியாவின் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.
Syrian Embassy website on Facebook: Embassy of Syria in India.
Embassy Account number: 8511990582.
IFSC: KKBK0000182
Contact numbers:
Mrs. Manal Kaddoura: 7303890055
Mr. Nebras Soliman: 9650059077
Email: embsyr.india@gmail.com
Syria Wants Help 👇
Syrian Embassy appeals for help from people in India to come forward & donate in the aftermath of devastating earthquakes in Syria. pic.twitter.com/DhnAxBlF0g
— ANI (@ANI) February 9, 2023
Sudarsan Pattnaik Sand Art 👇
My SandArt with message "Join Hands to Save The #Earthquake Victims" at Puri beach in India. #TurkeySyriaEarthquake pic.twitter.com/xtnHEUjBVD
— Sudarsan Pattnaik (@sudarsansand) February 9, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 09, 2023 10:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

