பிப்ரவரி 01, புதுடெல்லி (New Delhi): மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்த பாஜக தலைமையிலான மத்திய அரசில், கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பணியாற்றி வருகிறார். இவர் இன்று 2024 - 2025 (Interim Budget) ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். மத்திய அமைச்சரவை இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இன்று பட்ஜெட் கோப்புகளுடன் மத்திய நிதி அமைச்சர் தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து ஆறாவது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman) நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதால், இதன் வாயிலாக அவர் மன்மோகன் சிங்-க்கு பின் அதிக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண்மணி என்ற பெயரையும் பெறுகிறார்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி: இந்த மத்திய பட்ஜெட் உரையில் மத்தியில் நிதியமைச்சர் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் என்பது பல்வேறு சவால்களை திறம்பட சமாளித்து விரிந்த வளர்ச்சியை கண்டுள்ளது. எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கினை நோக்கி பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு பயணம் செய்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி மக்களை நேரடியாக சென்றடைகிறது என்ற விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நலத்திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இந்தியரின் வளர்ச்சிப்பாதையிலும், வளர்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. Lakshadweep In Budget 2024: பட்ஜெட் தாக்கல் 2024.. லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை.. மாலத்தீவுக்கு சாட்டையடி..!
வறுமையின் பிடியில் இருந்து மீண்ட மக்கள்: ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் மூலமாக அனைத்து துறையிலும் இந்தியா தன்னிறைவு பெற்று முன்னேறி வருகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 80 கோடிக்கும் அதிகமான குடும்பத்திற்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மதசார்பின்மை என்பது மக்களுக்கான நரேந்திர மோடி அரசின் திட்டங்கள் மூலமாக செயல்பட்டு வருகிறது, அதனை செயல்படுத்தியும் இருக்கிறது. சமூகநீதி, அரசியல் கட்சியின் கோஷமாக இருக்கும் நிலையில், அதனை சிறந்த நிர்வாகத்தின் மூலமாக நாம் செயல்படுத்தி இருக்கிறோம். மக்களுக்கு என்னேனே திட்டங்கள் தேவை என்பதை நன்கு உணர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து முற்றிலுமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சிகள்: விவசாயிகள், ஏழைகள் என மக்களின் நலத்திட்டங்கள் மூலமாக 10 ஆண்டுகளில் ரூ.34 இலட்சம் கோடி அளவில் மானியம் மக்களுக்கு சென்றடைந்துள்ளது. சாதி-மத வேறுபாடுகள் இல்லாமல் மக்களுக்கு திட்டங்கள் சென்றடைகின்றன. மீண்டும் முழு பெரும்பான்மையுடன் மக்கள் பாஜக அரசை தேர்ந்தெடுப்பார்கள். கல்வித்துறையில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் அனைத்தும், சீர்திருத்தமாக புதிய தேசிய கல்விக்கொள்கை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடி., 15 எய்ம்ஸ், 390 பல்கலை.,கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. சிறந்த நிர்வாகம், திட்டங்களின் மூலமாக இந்திய இளைஞர்களிடம் பணித்திறனுக்கான நம்பிக்கை என்பது அதிகரித்து இருக்கிறது. 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி திறன்மிகு இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு இருக்கிறது. UP Mass Marriage Fraud: கல்யாணம் பண்ணிக்கிட்டா 51,000 ருபாய்.. ஒரே நாளில் 500 திருமணங்கள்.. காசுக்காக மாப்பிளை இல்லாமல் தாலி கட்டிக்கொண்ட பெண்கள்..!
பெண்களின் வாழ்க்கை திறன் முன்னேற்றம்: ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோருக்கு உயரிய முன்னுரிமைகளை நமது அரசு அளித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 30 கோடி பெண்களுக்கு கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. 4 கோடி விவசாய பெருமக்களுக்கு பயிர்காப்பீடு என்பது ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கை காரணமாக பணவீக்கம் என்பது கட்டுக்குள் இருக்கிறது. உட்கட்டமைப்பு திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு இருகின்றன. உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 28% அதிகரித்து இருக்கிறது. பெண்கள் 43% கல்வியை அடைந்து, உயர் பதவிகளிலும் பணியாற்றி வருகிறார்கள். முத்தலாக் திட்டம் சட்டவிரோதம், மாநில மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் ஆகியவற்றின் கீழ் 70% பெண்களின் வாழ்க்கை திறன் மற்றும் தரம் உயர்ந்து இருக்கிறது.
ஆயுஷ்மான் பாரத் திட்ட விரிவாக்கம்: வளர்ச்சி, நிர்வாகம், செயல்திறன் போன்றவற்றில் அரசு சமமான அளவு கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து அரசு திட்டமிடுகிறது. வரும் 5 ஆண்டுகளில் தற்போது வரை இல்லாத அளவு வளர்ச்சி ஏற்படும். இந்திய பொருளாதாரம் என்பது நன்றாகவே உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மக்களின் சராசரி வருவாய் என்பது அதிகரித்து இருக்கிறது. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின், வரி அடிப்படையிலான வளர்ச்சி என்பது அதிகரித்து இருக்கிறது. பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 11.9 கோடி விவசாய பெருமக்கள் பயனடைந்து இருக்கின்றனர். பின்தங்கியுள்ள பகுதியின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கை எடுக்க, மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றி வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம், சுகாதார பாதுகாப்பு பணியாளர்கள் (ஆஷா) மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். 1 கோடி வீடுகளில் சோலார் பேனல் அமைப்பதால், வீட்டுக்கு தலா 300 யூனிட் மின்சாரம் என்பது கிடைக்கும். மின்னணு வாகனத்திற்கான பேட்டரி சார்ஜிங் மையம் அதிகரிக்கப்படும். Budget 2024: பட்ஜெட் தாக்கல்... நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பூட்டிய ஜனாதிபதி திரவுபதி முர்மு..!
மீன்வளத்துறையில் 55 இலட்சம் வேலைவாய்ப்புகள்: வேளாண்துறையில் விளைபொருள் அறுவடைக்கு பிந்தைய நடவடிக்கை வாயிலாக கூடுதல் முதலீடுகள் ஈர்க்கப்படும். சுய உதவிக்குழுக்கள் கடன் வாயிலாக 1 கோடி பெண்கள் இலட்சதீபத்தி ஆகி இருக்கின்றனர். யூரியாவை தொடர்ந்து டிஏபி உரமும் நானோ தொழில்நுட்பத்தின் கீழ் தயாரிக்கப்படும். வேளாண்துறையில் அரசு முதலீடு ஊக்குவிக்கப்படும். கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்திலும் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் கிராமப்புறங்களில் தொடர்ந்தது. நாம் 3 கோடி வீடுகள் என்ற இலக்கை நெருங்கி இருக்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 2 கோடி வீடுகள் அமைக்கப்படும். கடல் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி 10 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகி இருக்கிறது. மீன்வளத்துறையில் புதிதாக 55 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. கால்நடை வளர்ப்பினை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும். பாதுகாப்பு காரணங்களுக்காக தொழில்நுட்பத்தை வலுப்படுத்த திட்டங்கள் தொடங்கப்படும். மருத்துவமனை உட்கட்டமைப்பை பயன்படுத்தி மருத்துவ கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய குழுக்கள் அமைக்கப்படும்.
இந்திய உட்கட்டமைப்பு செலவுகள் ரூ.11.11 இலட்சம் கோடி:
தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு வட்டியில்லாமல் 50 ஆண்டுகளுக்கு ரூ.1 இலட்சம் கோடி அளவில் கடன் வழங்கி, அவர்களுக்கான தொழில் தொடங்க உதவி செய்யப்படும். சரக்கு இரயில் போக்குவரத்துக்கான பிரத்தியேக வழித்தடம் அமைக்கப்படும். இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள் 1000 விமானங்கள் வாங்கவுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை என்பது இரட்டிப்பாகி இருக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் மெட்ரோ இரயில் சேவை ஏற்படுத்தப்படும். 40000 இரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலுக்கு இணையான தரம் உயர்த்தப்படும். 2025ம் நிதியாண்டில் உட்கட்டமைப்புக்கான செலவுகள் ரூ.11.11 இலட்சம் கோடியாக அதிகரிக்கப்படும். ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான் ஆகியவற்றோடு ஜெய் அனுசந்தான் (ஆராய்ச்சி) மோடி அரசின் நோக்கம் ஆகும். Gold Silver Price Today: ரூ.47 ஆயிரத்தை கடந்ததும் சவரன் தங்கத்தின் விலை; நகைப்பிரியர்களுக்கு ஷாக் செய்தி.!
இலட்சத்தீவுகளில் சுற்றுலா மேம்பாடு: உள்நாட்டு சுற்றுலாவினை ஊக்குவிக்க துறைமுக இணைப்பு, சுற்றுலா உட்கட்டமைப்பு, பிற வசதி வசதி திட்டங்கள் இலட்சத்தீவு உட்பட பிற இந்திய தீவுகளில் மேற்கொள்ளப்படும். ஜூலை மாதம் இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் விரிவாக அறிவிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை என்பது 2.4 மடங்கு உயர்ந்து இருக்கிறது. மாநில அளவில் வளர்ச்சி மற்றும் அது சார்ந்த திட்டங்களை ஊக்குவிக்க 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக ரூ.75 ஆயிரம் கோடி வழங்கப்படும். 2014ல் இருந்து 2023 வரையில் அந்நிய நேரடி முதலீடு ரூ.596 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இது கடந்த 2005ல் இருந்து 2014 வரையிலான அந்நிய நேரடி முதலீடு தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். இறக்குமதி வரிகள், நேரடி மற்றும் மறைமுக வரிகள் விகிதம் அப்படியே தொடரும். 2024-25ஆம் நிதியாண்டில், நிதிப்பற்றாக்குறை என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1% ஆக இருக்கும்.