PM Modi Ujwala Yojana (Photo Credit: PMUY.Gov.com)

மார்ச் 07, புதுடெல்லி (New Delhi): 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் உஜ்வாலா திட்டத்தின் கீழ், நடப்பு 2024 - 2025 நிதியாண்டில், பயனர்களின் வங்கிக்கணக்கில் அடுத்த 12 மாதங்களுக்கு வரவுவைக்க பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2024-25 நிதியாண்டில் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தில், மார்ச் 1, 2024 நிலவரப்படி 10.27 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இருக்கின்றனர்.

ரூ.12,000 கோடி மானியத்திற்கு ஒப்புதல்: இவர்களின் வங்கிக்கணக்கில் மானியம் வரவு வைக்க, 2024-25 நிதியாண்டில் ரூ.12,000 கோடி செலவு ஆகும். இத்தொகையை விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதால், அடுத்த 12 மாதங்களில் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாக வரவு வைக்கப்படும். Nayanthara and Vignesh Shivan head for divorce?: நயன்தாரா போட்ட சோகமான பதிவு… விக்னேஷ் சிவனுடன் விவகாரத்தா?.! 

உஜ்வாலா (Ujjwala Scheme PMUY) திட்டம்: கடந்த 2016ம் ஆண்டு கிராமப்புற, தாழ்த்தப்பட்ட ஏழை-எளிய மக்கள் சிலிண்டர் பயன்படுத்துவதை உறுதி செய்யும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு சார்பில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தனது மொத்த எல்.பி.ஜி தேவையில் 60% இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதனால் ஏற்படும் விலையேற்றம், அது சார்ந்த பிரச்சனையில் இருந்து ஏழை-எளிய மக்களை பாதுகாக்கவும் இத்திட்டம் பயன்படுகிறது. 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கு ரூ.200 என்ற மானியத்துடன் தொடங்கப்பட்ட திட்டத்திற்கு தற்போது ரூ.300 வழங்கபடுகிறது. மாதம் ஒரு சிலிண்டர் முறையில், 12 மாதமும் சிலிண்டர் பெற்று பயனாளிகள் பலன் பெறலாம்.