நவம்பர் 04, பண்டா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பண்டா மாவட்டத்தில் வசித்து வரும் 30 வயதுடைய தலித் பெண்மணி, சம்பவத்தன்று அங்குள்ள மில்லுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
மதியம் 2 மணி முதல் 5 மணி வரை, உள்ளூரில் எப்போதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் மில்லில் மின்சார சேவை என்பது இருக்காது.
இந்நிலையில், 40 வயது பெண்மணி வேலைக்கு சென்ற நிலையில், அவரின் மகள் தனது தாயை காண சென்றுள்ளார். அப்போது, அரை மணி நேரம் ஆலை கதவை தட்டியும் திறக்கப்படவில்லை.
தாமதமாக மில்லின் உரிமையாளர் கதவை திறந்த நிலையில், உள்ளே சென்று பார்த்தபோது மகள் தாயின் உடலை பார்த்துள்ளார். தாயின் உடல் 3 துண்டாக வெட்டப்பட்டு உடல் கிடைத்துள்ளது. Drug Re-habitation Center Fire Accident: போதைமறுவாழ்வு மையத்தில் பயங்கர தீ விபத்து; உறங்கிக்கொண்டிருந்த 32 பேர் பரிதாப பலி., 16 பேர் படுகாயம்.!
இது குறித்து கேட்டபோது, மோட்டார் சக்கரத்தில் சிக்கி, அவரது உடல் துண்டிக்கப்பட்டு உயிரிழந்ததாக மில்லின் உரிமையாளர் ராஜ் குமார் சுக்லா மற்றும் அவரின் சகோதரர் ராம் கிருஷ்ணா சுக்லா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் மகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் பெண்மணி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானதாக தெரியவருகிறது. இதனால் பலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மில்லின் உரிமையாளர் மற்றும் அவரின் சகோதரரை அதிகாரிகள் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் உள்ளூர் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.