நவம்பர் 24, லக்னோ (Uttar Pradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் உத்திரப்பிரதேசத்தில், மாநில அரசு மக்களுக்காக பல நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டு வருகிறது.
பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கும், ரௌடிகளுக்கும் எதிராக புல்டோசர் ஃபார்முலா தொடங்கி வைக்கப்பட்டதில் அம்மாநில அரசின் பங்கு முக்கியமானது.
இந்நிலையில், மாநில அரசு நவ.25 ம் தேதி சாது டி.எல் வாஸ்வாணியின் பிறந்தநாளை முன்னிட்டு, அசைவ உணவுகள் விற்பனை செய்யவும், இறைச்சிக்கடைகள் செயல்படக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது அசைவ உணவுப் பிரியர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.